எழில்மிகும் இஸ்லாமியப் பேரூர் நீடூர்-நெய்வாசல் பற்றிய தகவல்களை உலக மக்களுக்கு அளிக்கும் பணியை துவங்க வேண்டும் என்ற எண்ணற்ற நீடூர்-நெய்வாசல் பெருமக்களின் ஆசையை நிறைவேற்றும் முகமாக இவ்விணையதள சேவையை அல்லாஹ்வின் பெரும் கிருபையால் துவக்கியிருக்கிறோம்.
இணையத்தின் மூலம் நமதூர் மக்களை ஒரு வளையத்திற்குள் கொண்டு வந்து கலந்தாலோசித்து நமது சமுதாயத்தின் நெடுநாளைய தேவைகளை நிறைவேற்ற முயற்சிப்போம்.
- வட்டியின் கோரப்பிடியிலிருந்து சமுதாயத்தை காப்பாற்ற இஸ்லாமிய நிதியம் துவங்குவது.
- வட்டி இல்லா நகைக்கடன் வழங்குவது.
- மாணவர்களை உற்சாகப் படுத்தும்முகமாக முதல் மதிப்பெண் வாங்கும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குவது.
- இன்றைய நவீனயுகத்தில் எதைப் படித்தால் சாதிக்கலாம் என்கிற வழிகாட்டுதல்கள் வழங்குவது.
- கல்வி, மருத்துவ உதவி வேண்டுவோர் பற்றிய தகவல்களை வெளியிடுவதன் மூலம் தன்னார்வத்துடன் உதவிகள் நேரடியாகக் கிடைக்க வழி செய்வது.
பொதுநல நோக்கத்துடன் துவங்கியிருக்கும் இவ்விணையதள சேவை சிறப்புடன் தொடர தங்களின் மேலான துஆவை வேண்டுகிறோம்.
என்றும் அன்புடன்
இணையதளக் குழுவினர்




TrackBack URI
