
விழுப்புரம் – மயிலாடுதுறை அகல ரயில் பாதையில் தலைமை பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு முடிந்துவிட்ட நிலையில், நேற்று முதல் முறையாக 118 கி. மீ., வேகத்தில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. பத்து பெட்டிகள் இணைக்கப்பட்ட அதிவேக சோதனை ரயில் மயிலாடுதுறையில் நேற்று மாலை 3.08 மணிக்கு புறப்பட்டு, 118 கி.மீ., வேகத்தில் விழுப்புரம் வரை சென்றது. இந்த அதிவேக சோதனை ரயில் மயிலாடுதுறையில் இருந்து 37 கி.மீ., தூரமான சிதம்பரத்தை 3.32க்கும், கடலூரை 4.05 மணிக்கும், பண்ருட்டியை 4.23க்கும் கடந்தது. அசுர வேகத்தில் சென்ற ரயில், மாலை 4.35 மணிக்கு விழுப்புரம் ஜங்ஷனை சென்றடைந்தது. (Read More…)