நீடூர் மற்றும் நீடூர்-நெய்வாசலிலிருந்து இவ்வாண்டு(2009) புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவோர் பட்டியல்:
- நீடூர் மஜீது காலனி முஹம்மது மூஸா, மகளார் மற்றும் சகோதரியுடன்.
- நீடூர் வடக்குத்தெரு மர்ஹும் பகுருதீன் அவர்களின் மனனவி.
- நீடூர் ரபீக் அவர்களின் மனைவி பாத்திமா.
- நீடூர் மெயின்ரோடு அப்துல் ஹமீது.
- நீடூர் சலவாத் பாவா காலனி சித்தீக் அவர்கள் தனது துணைவியாருடன்.
- P.M. நகர் சரபுஜ்ஜமான் தனது தாயார் மற்றும் துணைவியாருடன்.
- நீடூர்-நெய்வாசல் மஷாயிக் தெரு அன்சாரி.
- நீடூர்-நெய்வாசல் ஜின்னாத் தெரு செல்ல மரைக்கான் முபாரக் அவர்களின் துணைவியார் உஹது நிஸா.
- நீடூர்-நெய்வாசல் புதுமனைத் தெரு அமானுல்லாஹ்.
- நீடூர்-நெய்வாசல் ஜின்னாத் தெரு S.A.மன்சூர் அலி – அப்துல் ரவூப் ஆகியோரின் சகோதரி மும்தாஜ் பேகம் தனது மகனார் ஜமால் முஹம்மதுடன்.
- நீடூர் ஹலிநூர் காலனி கியாசுதீன் தனது துணைவியாருடன்
- நீடூர்-நெய்வாசல் மேலத்தெரு மர்ஹூம் S.நூர் முஹம்மது அவர்களின் மகனார் நஜீர் அஹமது தனது மனைவி நஸீராவுடன்(அபுதாபியிலிருந்து)
- நீடூர்-நெய்வாசல் ரயிலடித்தெரு மர்ஹும் சி.க.ஷர்புத்தீன் அவர்களின் மகளார் நஜீர் அஹமது & சகோதரர்களின் சகோதரி நர்கீஸ் பேகம் தனது கணவர் அப்துல் அஜீஸ் மற்றும் மகளுடன் ரியாதிலிருந்து புனித ஹஜ்ஜை நிறைவேற்ற இருக்கின்றார்கள்.
தகவல்: மெளலவி A.முஹம்மது இஸ்மாயில் பாகவி, முதல்வர் JMHAC நீடூர்-நெய்வாசல் அல்லாஹ் இவர்களின் ஹஜ்ஜை ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக ஆக்குவானாக!
குறிப்பு: மேற்கண்ட பட்டியலில் விடுபட்டோர் பற்றிய விவரம் அறிவோர் admin@niduronline.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்ய வேண்டுகிறோம்.
நீடூர் புகை வண்டி நிலையம் தயார் நிலையில்…!
நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மிஸ்பாஹுல்ஹுதாவின் ஸ்தாபகர் மர்ஹும் பானி ஹஜ்ரத் அவர்களின் மகனார் அல்ஹாஜ் நூருல்ஹுதா இன்று(17-11-2009) மாலை 4 மணிக்கு காலமானார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
தகவல்: பைஜுர் ஹாதி, துபை
இன்று(17-11-2009) இரவு 10 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.
இப்போது எல்லோரும் பயப்படும் ஒரு விஷயமாக “சர்க்கரை நோய்’ உருவாகிவிட்டது. நம் உடலில் கணையம் சுரக்கும் இன்சுலின்தான், ரத்தத்தில் குளுகோஸ் (சர்க்கரை) அளவை சீராக பராமரிக்கிறது. உடலுக்குத் தேவைப்படும் இன்சுலின் உற்பத்தி செய்யப்படாவிட்டாலோ அல்லது உற்பத்தி செய்த இன்சுலினை நம் உடல் சரியாக பயன்படுத்திக் கொள்ளாவிட்டாலோ “சர்க்கரை’ நோய் ஏற்படுகிறது.”டைப்-1′சர்க்கரை நோய் வகையால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் “இன்சுலின்’ போட்டுக் கொள்ள வேண்டியிருக்கும். (Read More…)

நம் அன்றாட வாழ்க்கையில் நிகழும் பல்வேறு சம்பவங்களை சிறிது காலம் கழித்து அசைப்போட்டுப் பார்க்கிறபோது நாம் இவ்வாறு நடந்தது தேவையற்றது – தவறானது என்று உள்மனம் சொல்வதை உணர முடியும். தேவையற்ற உணர்ச்சி வேகத்தால் கொப்பளிக்கின்ற கோபம் சமுதாயப் பிளவிற்கு வித்திட்டு சமூக முன்னேற்றத்தை முடக்கி விடுகிறது. (Read More…)
நீடூர்-நெய்வாசல் ஜின்னாத்தெரு கப்பக்காரங்க வீடு ஹாஜியா ஹசீனா(மாய்) அவர்களின் மருமகளும் பிரான்ஸ் சலாஹுத்தீன் அவர்களின் மனைவியுமான ஆயிஷா இன்று(08-11-2009) அதிகாலை 5:00 மணிக்கு வேலூரில் காலமானார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 7-மணிக்கு நீடூர்-நெய்வாசலில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நீடூர்-நெய்வாசல் பாவா நகர் நிஸ்வான் மத்ரஸா கட்டிடப்பணிக்காக தாயகத்திலிருந்து துபை வருகை தந்திருக்கும் பாவா நகர் முத்தவல்லி முஹம்மது யூசுப் அவர்களுக்கு துபை நீடூர்-நெய்வாசல் அசோஸியேஷனின் சார்பில் நேற்று(06-11-2009) மாலை தேரா தமிழ்நாடு உணவகத்தில் வரவேற்புக் கூட்டம் நடைபெற்றது. நீடூர், நீடூர்-நெய்வாசல் மற்றும் பாவா நகர் ஜமாஅத்தார்கள் திரளாகப் பங்கேற்றார்கள்.
தகவல்: பைஜூர்ஹாதி

நீடூர்-நெய்வாசல் பாவா நகர் நிஸ்வான் மத்ரஸா நிதி வசூலுக்காக முத்தவல்லி முஹம்மது யூசுப் துபை வருகை தந்துள்ளார். நிஸ்வான் மத்ரஸா கட்டிட நிதி வழங்கி அல்லாஹ்வின் அருள்பெற வேண்டுகிறார்கள்.








