இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஆகஸ்டு 2-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மிஸ்பாஹுல்ஹுதா அரபிக் கல்லூரியின் 63-வது ஆண்டு fபாஜில் மிஸ்பாஹி, மவ்லவி ஆலிம் மிஸ்பாஹி, ஹாfபிழ் மற்றும் காரி பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது.
இவ்வாண்டு 33 மாணவர்கள் fபாஜில் மிஸ்பாஹியாகவும், 9 மாணவர்கள் மவ்லவி ஆலிம் மிஸ்பாஹியாகவும், 1 மாணவர் ஹாfபிழாகவும், 3 மாணவர்கள் காரியாகவும் பட்டம் பெறுகின்றார்கள்.
ஆகஸ்டு 2-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு துவங்கும் விழாவிற்கு அணி சேர்க்க தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் மாண்புமிகு கவிக்கோ அப்துல் ரஹ்மான் M.A., Ph.D, சென்னை அடையாறு பள்ளியின் பேஷ் இமாமும், சென்னை நூருல் ஹிதாயா ஆங்கிலோ அரபிக் கல்லூரியின் முதல்வருமான மவ்லவி அல்ஹாபிழ் M.சதீதுத்தீன் fபாஜில் பாகவி M.A.,M.Phil ஹஜ்ரத் ஆகியோருடன் ஜாமிஆவின் பேராசிரியர்களும் சிறப்புரையாற்ற உள்ளார்கள்.
J.M.H. அரபிக் கல்லூரியின் கல்விக்குழுத் தலைவர் மவ்லவி அல்ஹாஜ் O.M. அப்துல் காதிர் பாகவி அவர்கள் பட்டமளித்துப் பேருரை ஆற்றுகிறார்கள்.