31
May

நீடூர்-நெய்வாசல் மேலத்தெரு மர்ஹும் ஹபீப்ரஹ்மான் அவர்களின் மகனார் முபாரக் இன்று[31-05-2009] காலமானார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
தகவல்: STD ஜெகபர் அலி

28
May

samsiswa

To download Right Click & Save Target As

22
May

நீடூர்-நெய்வாசல் ஹாஜித்தெரு அல்ஹாஜ் அப்துல் ரஷீது – அஹமது கபீர் ஆகியோரின் தாயார் ஹாஜியா மஸ்ஊதா அம்மாள் கடந்த 21-05-2009 வியாழன் நள்ளிரவு 1-மணிக்கு காலமானார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

தகவல்: A.அன்சர் அஹ்மது, சிங்கப்பூர்

21
May

நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மஸ்ஜித் பூர்த்தியடைய உதவுங்கள்!

jmnew

கடந்த 25-07-2008 அன்று வெகு விமரிசையாக திறப்புவிழா கண்ட பிரமாண்டமான நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மஸ்ஜித், திறப்பு விழாவிற்குப்பின் நிதிப் பற்றாக்குறையின் காரணமாக சொல்லிக் கொள்ளும்படியாக எந்தவொரு வேலையும் செய்யப் படாமலே உள்ளதை நாம் அறிவோம்.

இடைப்பட்டக் காலத்தில் தடைப்பட்ட வேலைகளைத் தொடர, குறைந்தபட்சம் மினாரா, டூம் வேலைகளைப் பூர்த்தியாக்க ரூபாய்.7 லட்சம் செலவாகும். முனைவர் ரபீயுத்தீன், அல்ஹாஜ் T.S.R.நஜிமுத்தீன் ஆகியோர் தலா ரூபாய் 1 லட்சம் வீதம் கொடுத்து வேலைகள் துவங்க வழி செய்திருக்கின்றார்கள். இன்னும் குறைந்தபட்சம் ரூபாய். 5 லட்சம் தேவைப்படுகிறது. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி அவனது இல்லம் பூர்த்தியாக தங்களால் இயன்ற நிதியுதவி செய்து மறுமையில் அவன் தரும் அழகிய வீட்டை பரிசாக பெற்றுக் கொள்ளுமாறு  வேண்டுகிறோம்.

தகவல்: முனைவர் ரபீயுத்தீன்

20
May

jmorafi

நீடூரில் தீன் கல்லூரி பணிகள் முழுவீச்சில் துவக்கியுள்ளன. இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் கல்வியாண்டில் கல்லூரி துவங்கும் என்று தீன் கல்லூரி ரபீயுத்தீன் கல்வி அறக்கட்டளையின் தலைவர் முனைவர் ரபீயுத்தீன் நமது இணையதளத்திற்கு அனுப்பிய மின்னஞ்சல் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.