• Page 1 of 2
  • 1
  • 2
  • >
29
Mar

தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தலைவரும் நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரி முன்னால் முதல்வருமான மர்ஹும் தாஜுல் ஷரீஅத் மௌலானா மௌலவி S.R.ஷம்ஷுல் ஹுதா ஹஜ்ரத் அவர்களின் தாயார் கதிஜா அம்மாள் இன்று (29-03-2009) ஞாயிற்றுக் கிழமை மாலை சுமார் 6 மணியளவில் தஞ்சை மாவட்டம் வடக்கு மாங்குடியில் அன்னாரது இல்லத்தில் காலமானார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா நாளை (30-03-2009) திங்கள் கிழமை காலை 10 மணியளவில் வடக்கு மாங்குடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

தகவல்: S.B.சகதுல்லாஹ் S.R.S குடும்பத்தினர்  வடக்குமாங்குடி
27
Mar

ஜெய்ப்பூரில் 25-03-2009 அன்று காலமான நீடூர் மர்ஹூம் T.S.R.அப்துல் அஸீஸ் அவர்களின் மருமகன் அப்துல் ரஷீது ஜனாஸா  இன்று(27-03-2009) இஷாத் தொழுகைக்குப்பின் நீடூரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தகவல்:Dr.ரபீயுத்தீன், நீடூர்

26
Mar

நீடூர் மர்ஹூம் T.S.R.அப்துல் அஸீஸ் அவர்களின் மருமகன் வடக்குத்தெரு அப்துல் ரஷீது நேற்று(25-03-2009) ஜெய்ப்பூரில் காலமானார்.

அன்னாரின் ஜனாஸா இன்று(26-03-2009) நீடூரில் நல்லடக்கம் செய்யப்படும்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

தகவல்: Dr.ரபீயுத்தீன் from Dubai Air Port

23
Mar

உனக்குள் ஒரு சுரங்கம்-iPod compatible MP4 download Episode10to12

usie10

usie11 usie12

To Download Right click & Save Target As

19
Mar

சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக..

உலகை உலுக்கி வரும் பொருளாதாரப் பிரச்சினையை நாம் எதிர்கொள்ளவும், முன்னெச்சரிக்கையாக இருக்கவும் இஸ்லாமிய வாழ்வு நெறி எப்படி செம்மைப் படுத்துகிறது என்பதை இதன் மூலம் அறிய முடிந்தது. திருமறையிலிருந்து பொருத்தமான மேற்கோள்கள் இந்த கட்டுரையை மேலும் அழகு சேர்த்தது. இந்தக் கட்டுரை பாதிக்கப்பட்டவர்களுக்கு மன உறுதியையும்,மற்றவர்களுக்கு அதனை எதிர்கொள்ளும் பக்குவத்தையும் தரும் என்று நம்புகிறேன். வாழ்த்துக்கள்.

H.பிரோஸ்கான், வவ்வாலடி

17
Mar

gc

இன்று ஒட்டு மொத்த உலகமுமே பொருளாதாரப் பின்னடைவால் சிக்கித் தவிக்கின்றது. உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள பல்வேறு நிறுவனங்களில் ஆட்குறைப்பு , சம்பளக் குறைப்பு என்று தடாலடியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன.

இதனால் – வேலையை இழந்தவர்களும், சம்பளம் குறைக்கப் பட்டவர்களும் பல்வேறு பொருளாதாரப் பிரச்னைகளுக்கும், மன நலப்பிரச்னைகளுக்கும் ஆளாகிறார்கள். (Read More…)

14
Mar

நீடூர்-நெய்வாசல் J.M.H.அரபிக் கல்லூரியின் முன்னாள் முதல்வரும், தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் முதுபெரும் தலைவருமான O.M.அப்துல் காதிர் பாகவி அவர்களின் துணைவியார் லைலாஜான் இன்று காலை காலமானார். அன்னாரின் ஜனாஸா இன்று மாலை அசர் தொழுகைக்குப்பின் நல்லடக்கம் செய்யப்படும்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

தகவல்:நூ.அப்துல் ஹாதி பாகவி சென்னை. 81

13
Mar

உனக்குள் ஒரு சுரங்கம்-iPod Compatible MP4 Download Episode 7 to 9

usie7 usie8usie9

To Download Right Click & Save Target As

12
Mar

நீடூர் மஜீத் காலனி மர்ஹூம் முஸ்தாகுதீன் அவர்களின் மனைவி தாஜுல்ஹுதா இன்று(12-03-2009) அதிகாலை மலேசியாவில் காலமானார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

தகவல்:M.ரபி அஹ்மது, சிங்கப்பூர்

12
Mar

“நபிகளாரின் மரணம்”-ஜும்ஆ முரசு 4

Word Document PDF File

11
Mar

பெளர்ணமி – ஜும்ஆ முரசு 3

Word Document  PDF File

தொழில்நுட்பக் காரணங்களால் தாமதமாகப் பிரசுரிக்கப் படுகிறது.

11
Mar

ரைஸ்மில்தெரு வாணாரத்தாங்கள் வீடு மர்ஹூம் ஹபீபுல்லாஹ் அவர்களின் மச்சான் கடலங்குடி முஹம்மது இக்பால் நேற்று(10-03-2009) இரவு காலமானார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

தகவல்: STD ஜெகபர் அலி

10
Mar

அபுதாபியில் கடந்த 07-03-2009 அன்று காலமான பரக்கத் நிசா ஜனாஸா நீடூரில் இன்று(10-03-2009) பகல் 3 மணி அளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அன்னாரின் மக்பிரத்திற்காகவும், மறுமை நற்பதவிக்காகவும் துஆ செய்வோம்.

10
Mar

ttalaq

இஸ்லாமிய மாத இதழ்களில் இப்படி சில கேள்விகள் கேட்கப் படுகின்றன:

“எஸ்.எம்.எஸ் வழியே அல்லது தொலைபேசி வழியே தலாக் சொன்னால் தலாக் நிகழ்ந்து விடுமா?” ஆம்! நிகழ்ந்து விடும் என்று ஒரே வரியில் பதில் அளிக்கப் படுகிறது.

ஆனால் பின்னணி என்ன என்பது புரிந்து கொள்ளப் படாமலே பதில்கள் அளிக்கப் படுவதால், பலரது வாழ்க்கை பாதிக்கப் படுகிறது என்பதை ஏனோ புரிந்து கொள்ளத் தவறி விடுகிறோம். சாதாரணமாக மருத்துவம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் மருத்துவர்கள் கூட, தங்கள் ஆலோசனைகளை எழுதி விட்டு, இறுதியில் அருகில் உள்ள மருத்துவரை அணுகவும் என்று முடிக்கிறார்கள். ஏன் அப்படிப் பட்ட ஒரு அணுகுமுறையை நாம் மேற்கொள்ளக் கூடாது? தலாக் சம்பந்தப் பட்ட கேள்விகளுக்கு அளிக்கின்ற பதில்களோடு சேர்த்து, அருகிலுள்ள இமாமையோ, அரபுக் கல்லூரியையோ அணுகவும் என்று எழுதலாம் தானே? விஷயத்துக்கு வருவோம். (Read More…)

9
Mar

பிரபல வைர வணிகர் இலங்கை ஹாஜி அலி வபா நேற்று (08-03-2009) அவரது இல்லத்தில் காலமானார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

தகவல்: Dr.ரபீயுத்தீன், ஹாங்காங்

8
Mar

“கேன்சலான ரேஷன் கார்டுகள் விவகாரம்” கங்கணம்புத்தூர் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஜெகபர் அலியுடன் தொலைபேசி உரையாடல்

Click Here

8
Mar

உங்கள் ரேஷன் கார்டு கேன்சல் ஆகிவிட்டதா(ம்)? பொதுமக்களின் கவனத்திற்கு!

அரசு விலையில் அங்காடிப் பொருள்களை வாங்குவதற்கு மட்டுமின்றி நாம் இந்தியக் குடிமகன் என்பதை நிரூபிப்பதற்காகவும் “ரேஷன் கார்டு” பெரிதும் பயன்படுகின்றது. அத்தகைய ரேஷன் கார்டுகளை பல்வேறு காரணங்களை சொல்லி காலாதிவிதியாக்குக்கின்ற வேலையை அரசு சார்ந்த அமைப்புகள் செய்து வருகின்றன.

ரேஷன் கார்டுகளை போலியாக வைத்திருப்போரை மெய்யாகவே இனங்கண்டு தக்க நடவடிக்கை எடுப்பதில் எவ்விதத் தவறும் இல்லை. மாறாக நேர்மையான முறையில் ரேஷன் கார்டு வைத்திருப்போரின் கார்டுகளை எவ்வித தகுந்த காரணமும் இல்லாமல் காலாவிதியாக்குவது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.

பொதுமக்கள் விழிப்புணர்வுடன் சமுதாய அமைப்புகள் மூலம் அரசின் மேல்மட்ட நிர்வாகத்தை தொடர்புக் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்த வேண்டும்.

8
Mar

நீடூர் வடக்கு மெயின் ரோடு அப்துல் ஹமீது இன்று(08-03-2009) காலமானார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

7
Mar

நீடூர் சலவாத் பாவா காலனி செய்யிது முபாரக் அவர்களின் மனைவியும் நீடூர்-நெய்வாசல் புதுக்கேணித்தெரு கொட்டாய் வீடு மர்ஹும் ஷர்புதீன் அவர்களின் மகளுமான பரக்கத் நிசா இன்று பிற்பகல் 3 மணி அளவில் அபுதாபியில் காலமானார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

தகவல்: தேரிழந்தூர் தாஜுதீன், T.A.S.ஆஷிக் அலி அபுதாபி

7
Mar

“நீடூர்-நெய்வாசல்” முன்மாதிரி ஜமாஅத் – ஆவல் நிறைவேறுமா??-மானசீகன்

அல்லாஹ் நமக்களித்த மிகப்பெரிய சக்தி ஜமாஅத் கூட்டமைப்பு. ஜமாஅத் கூட்டமைப்பின் கட்டுக்கோப்பைப் பார்த்து அரசு துறைகள் கூட வியந்த வரலாறு உண்டு. ஆனால் பல ஊர்களிலும் ஜமாஅத் கட்டுக்கோப்பு கேள்விக்குறியாகி வருகின்றது என்ற கசப்பான உண்மையை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். (Read More…)

  • Page 1 of 2
  • 1
  • 2
  • >