• Page 1 of 2
  • 1
  • 2
  • >
29
Jan

உலகமே உன் கையில்! - ஜும்ஆ முரசு 1

Word File  

PDF File 

Bamini Font

பதிவிறக்கம் செய்து அச்செடுத்து தங்களூர் பேஷ் இமாம் அவர்களிடம் கொடுத்து     30-01-2009 அன்று ஜும்ஆப் பேருரையாற்ற வகை செய்யுங்கள்.

27
Jan

நீடூர் ஹலிநூர் காலனி அஷ்ரப் அலி-சலீம்-முஜம்மில் தகப்பனார் டார்ஜான் முஹம்மது இஸ்மாயில் இன்று(27-01-2009) நண்பகல் 1:30 மணிக்கு காலமானார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

தகவல்: Dr.ரபீயுத்தீன், ஜப்பான்.

26
Jan

jmurasu

முஸ்லிம்களின் ஒற்றுமைக்கும் மேம்பாட்டிற்கும் வலிமை சேர்க்கின்ற ஜும்ஆப் பேருரைகள் சீர் செய்யப்பட்டு  மார்க்கம், சமூகம், நாட்டு நடப்புகள், உலக நிகழ்வுகளை பிரதிபலிக்கின்ற தரம் மிக்கவையாக அனைத்து ஊர் ஜமாஅத்துகளிலும் ஒரேக் குரலில் ஒலிக்க வேண்டும் என்கிற சமுதாய ஆர்வலர்களின் பல்லாண்டுக் காலக் கனவு நனவாகும் வகையில் அதன் முதன் முயற்சியாக “மிஸ்பாஹிகள் பேரவை”யில் முடிவு செய்யப்பட்டு இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் வெள்ளி முதல் இரு வாரங்களுக்கு ஒரு முறை தமிழகத்தின் தலைச்சிறந்த மார்க்க அறிஞர்களின் குழுவால் ஜும்ஆப் பேருரை தயாரிக்கப் பட்டு முன்னதாகவே நமது நீடூர்ஆன்லைன்.காம் இணையதளத்தில் வெளியிடப்படும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த ஜும்ஆப் பேருரைகளை பிரதி எடுத்து அனைத்து ஊர் இமாம் பெருமக்களும் இந்த முயற்சிக்கு துணை நின்று ஒரே குரலில் ஜும்ஆப் பேருரைகளை அமைத்துக் கொண்டு இந்த சீரிய சேவைக்கு ஆலோசனைகளை வழங்கி அல்லாஹ்வின் திருப் பொருத்ததைப் பெறுமாறு வேண்டுகிறோம்.

இன்ஷா அல்லாஹ் சமூக ஆர்வலர்கள் வெளியிட்டுள்ள கருத்தின்படி இம்முயற்சியின் விரிவாக்கம் தமிழக ஜமாஅத்துல் உலமா சபை மூலம் மாநிலம் முழுமைக்குமாக இருக்கும்.

உலகலாவிய  ஊர்ஜிதமான முக்கிய நிகழ்வுகளை தமிழில் குழுவின் பார்வைக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.

26
Jan
நீடூர் வடக்கு மெயின்ரோடு முஹம்மது பாரூக், முஹம்மது ஹாரிஸ் ஆகியோரின் தாயாரும், அப்துல் வக்கீல் அவர்களின் பாட்டியுமான ஹாஜியா ஜன்னத் பீவி இன்று அதிகாலை 4 மணிக்கு காலமானார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
தகவல்:முஹம்மது ரபிக், பெட்டாலிங் ஜெயா, மலேசியா.
23
Jan

pc

கிறிஸ்துவப் பள்ளிக் கூடங்களில் படிக்கும் வாய்ப்பு எனக்கு இளமையில் கிட்டியது முத‌லில் ரோமன் கத்தோலிக்க கன்யாஸ்திரீகள் நடத்திய கான்வென்ட் அடுத்து பிராடஸ்டண்ட் மிஷன் நடத்திய உயர்நிலைப்பள்ளி எல்லா வகுப்புகளிலும் இந்து சமயத்தைச் சார்ந்த‌ மாணவர்களே(கான்வென்டில் மாணவிகளும்) மிக அதிகமாக இருந்தார்கள். (Read More…)

21
Jan

தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் முன்னாள் தலைவரும், வேலூர் பாக்கியாத்துஸ்ஸாலிஹாத், நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரிகளின் முன்னாள் முதல்வருமான அல்ஹாஜ் H.கமாலுத்தீன் பாகவி ஹஜ்ரத் இன்று(21-01-2009) அதிகாலை 4-மணிக்கு காலமானார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை சேலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல்:A.முஹம்மது இஸ்மாயில் பாகவி,முதல்வர் J.M.H.அரபிக் கல்லூரி

20
Jan

நீடூர்-நெய்வாசல் ஜவ்ஹர் தெரு பொறையாத்தாங்கள் வீடு அஷ்ரப் அலி – ஹாரூன் ரஷீது தாயார் அஹ்மது நாச்சியார் இன்று(20-01-2009) இரவு காலமானார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

தகவல்: STD ஜெகபர் அலி

19
Jan

பிரான்ஸ் வில்லியசுர்மான் தமிழ் பள்ளிவாசலில் பாலஸ்தீன முஸ்லிம்களுக்காக நிதி வசூல் செய்யப் பட்டது 

புகைப்படங்கள்: நல்லம்பல் பக்ருத்தீன் 

18
Jan

நீடூர்-நெய்வாசல் கீழத்தெரு அன்ஸாரி கடந்த 15-01-2009 அன்று சிங்கப்பூரில் காலமானார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

17
Jan

alasal2

16
Jan

சகோதரர் முஹம்மது ரபீக் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்,

ஆரோக்கியமான கலந்துரையாடல்கள் மூலமாக இன்ஷா அல்லாஹ் நல்ல திருப்புமுனையை நிச்சயம் ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையுடன் அனைவரும் முன்வந்து தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் அழகிய முன் மாதிரியான ஓர் ஜமாத் அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. (Read More…)

16
Jan

பிரான்ஸ் வில்லியசுர்மான் மஸ்ஜித் இஸ்லாஹ் பள்ளியில் 15-01-2009 இஷாத் தொழுகையில் இமாம் ஷேஹ் பஷீர் அவர்கள் காஸா படுகொலைக்கெதிராகக் கேட்ட துஆ

frmi15

15
Jan
சகோதரர் A.M.ஷாஹூல் ஹமீது அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்,
பல வருடங்களுக்கு முன்பு, வரதட்சணை வாங்கக் கூடாதென்று ஊர் நிர்வாகிகளால் இயற்றப்பட்ட (எழுத்துக்களால் எழுதப்படாத-மீறினாலும் தண்டனை எதுவும் அளிக்கப்படாத) ஒரு சட்டத்தை ஏற்று, அனைவரும் ஒன்றுபட்டு வரதட்சணை என்ற வார்த்தையையே வழக்கொழியச்செய்து, அரசாங்கத்திற்கே முன்மாதிரியாக விளங்கிய நமது சமுதாயம், இன்று தராவீஹ் தொழுகை எத்தனை ரகாஅத் என்பதில் ஆரம்பித்து, ஹனஃபி இமாமைப் பின்பற்றி ஷாஃபி முறையில் தொழுதுகொள்வதுவரை கொள்கை முரண்பாடுகளால் பிளவுப்பட்டுள்ளதே? ஏன்? (Read More…)
14
Jan

msh

நீடூர்ஆன்லைன்.காம் இணையதளம் வாயிலாக மக்கள் மனதில் அழகிய தாக்கத்தை ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.

பல நூற்றாண்டுகளாக அறிவை வளர்த்தோம். சில நூற்றாண்டுகளாக விஞ்ஞானம் வளர்த்தோம். இனியாவது சகோதரத்துவம் வளர்ப்போம். (ஹாங்காங்கிலிருந்து A.M.ஷாஹுல் ஹமீது)

எந்த ஒரு சமுதாயத்திலும் அல்லது நிர்வாகத்திலும் மாற்றுக் கருத்து / கருத்து வேறுபாடு நிச்சயம் இருக்கும்.

அவ்வாறான கருத்து வேறுபாடுகள்தான் உலகில் பல ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. ஆகையால் மாற்றுக் கருத்துக்களை நாம் நிச்சயமாக வரவேற்கத்தான் வேண்டும். (Read More…)

13
Jan

நீடூர்-நெய்வாசல் ரைஸ்மில்தெரு முன்னாள் முத்தவல்லி மர்ஹூம் தீனானா ஷேக் தாவூது அவர்களின் மனைவியும் T.A.S.அக்பர் அலி சகோதரர்களின் தாயாருமான ரஹ்மத்துனி இன்று(13-01-2009) அதிகாலை 3-மணிக்கு காலமானார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

தகவல்: A.முஜீபுர் ரஹ்மான்(சிட்டி பாபு) துபை

11
Jan

நீடூர்-நெய்வாசலில் மூன்று பள்ளிவாசல் கட்டிடப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு ஊரெங்கும் இல்லங்கள் கட்டி மக்களின் உள்ளங்களில் இடம் பிடித்த மேஸ்த்ரி கண்ணையன் இன்று மாரடைப்பால் காலமானார்.

10
Jan

 நர்கிஸ்-மல்லாரி பதிப்பகம்   இணைந்து நடத்திய
‘முகம்மது இஸ்மாயில்-இபுராஹிம் பீவி நினைவு’
நாவல் -கட்டுரைப் போட்டியின் இறுதிகட்டத்  தேர்வில்

இடம் பெற்றோர் பட்டியல்

பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு நமக்கு ஆதரவு நல்கியிருக்கிறார்கள். புதியவர்களுடன் மூத்த எழுத்தாளர்களும் கலந்து கொண்டு நம்மை கௌரவித்திருக்கிறார்கள்.
அந்தப் பெருமக்களுக்கு நம் முதல் நன்றி. (Read More…)

5
Jan

பிரான்ஸ் ப்ரீபாக்ஸ் டீவியில் நீடூர்-நெய்வாசல் பள்ளிவாசல் திறப்புவிழா வீடியோ இன்று முதல் ஒளிபரப்பப் பட்டு வருகிறது.

ப்ரீபாக்ஸ் டீவி இணைப்புடைய பிரான்ஸ்வாழ் தமிழ் இஸ்லாமிய பெருமக்கள் பார்த்து வருகின்றார்கள்.

ஒளிபரப்பில் உதவிய நல்லம்பல் ஹாஜா அவர்களுக்கு நீடூர்ஆன்லைன்.காம்  இணையதளக்குழுவின் சார்பில் நன்றியைத் தெரித்துக் கொள்கிறோம்.

5
Jan

சோழபுரத்தை சொந்த ஊராய்க் கொண்டு நீடூர்-நெய்வாசலை நீண்ட காலப்புகலிடமாய் அமைத்துக் கொண்டு நர்சரி செடிகளின் சேவையாற்றி “செடிபாய்” என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட அப்துல் ஜப்பார் நேற்று(04-01-2009) இரவு நீடூர்-நெய்வாசலில் காலமானார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா பொதுமக்கள் பார்வைக்காக நீடூர்-நெய்வாசல் சலவாத் பாவா நினைவு மகாலில் வைக்கப்பட்டு இன்று(05-01-2009) மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.

4
Jan

நீடூர்-நெய்வாசல் பள்ளிவாசல்தெரு நரி வீடு பாரூக்-சாதிக் ஆகியோரின் தாயார் ஜெய்த்தூன் பீவி காலமானார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

தகவல்: S.K.M.A.அஷ்ரப் அலி, சிங்கப்பூர்

  • Page 1 of 2
  • 1
  • 2
  • >