30
Nov

Episode-15

To Download Right Click & Save Target As

 

29
Nov

நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மஸ்ஜிதின் முன்னாள் முத்தவல்லியும், ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபிக்கல்லூரியின் முன்னாள் பொதுச்செயலாளருமான M.A.P.அப்துல் ஷுக்கூர் இன்று(29-11-2008) இரவு மஷாயிகு வீதி அவரது இல்லத்தில் காலமானார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

தகவல்: நளீம், பேங்காக். STD ஜெகபர் அலி, நீடூர்-நெய்வாசல்

28
Nov

ஹாங்காங்வாழ் நம் இளம் சகோதரர்கள் இறைமார்க்கத்தின் பெயரில் சங்கமித்திருக்கின்றார்கள். அவர்களின் மார்க்க வேட்கையை இறைவன் பொருந்திக்கொள்வானாக! மேலும் விவரம் அறிய http://hongkongislam.blogspot.com/2008/11/deen-ul-islam-inauguration.html இங்கே சொடுக்கவும்

28
Nov

2008-ஆம் ஆண்டு நீடூர்-நெய்வாசலிலிருந்து புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவோர்:

1.மஷாயிக்தெரு வாப்பு வீடு நஜிமுத்தீன் மற்றும் அவர்களது துணைவியார் சாஜிதா பேகம்
2. ரைஸ்மில்தெரு கமாலுத்தீன்  மற்றும் அவர்களது துணைவியார் சர்புன்னிஸா
3. ஹாஜித்தெரு அப்துல் ஹலீம் மற்றும் அவர்களது துணைவியார் ஷம்சாத் பேகம்
4. நீடூர் மஜீது காலனி செய்யிது மகனார் சாதிக்குல் அமீன் மற்றும் அவர்களது துணைவியார்

5. மேலத்தெரு மர்ஹும் அப்துல்ஜலீல் அவர்களின் மனைவி (பிரான்ஸ்) அய்யூப் சகோதரர்களின் தயார் மும்தாஜ் பேகம்
6. புதுக்குளத்தெரு முஹம்மது இக்பால் அவர்களது துணைவியார்                                         

7. நீடூர் மஜீது காலனி T.S.R. அய்யூப் மற்றும் அவர்களது துணைவியார்
8. பள்ளிவாசல்தெரு மர்ஹும் அலாவுதீன்பாய் அவர்களின் மகனார் ஜெகபர் சாதிக்(குவைத்திலிருந்து)

9.நீடூர் மெயின் ரோடு அல்ஹாஜ் T.S.R.அப்துல் ரஹீம் அவர்களின் மகனார் ஹாஜி முஹம்மது பாரூக் மற்றும் அவர்களது துணைவியார் ஹாஜ்ஜா நூருல் அய்ன்.

10. J.M.H. ரோடு மர்ஹூம் K.R.பஜல் அவர்களின் துணைவியார்

27
Nov

கிளியனூர் அரபிக் கல்லூரியின் முதல்வர் அல்ஹாஜ் அப்துல் ஸலாம் மிஸ்பாஹி ஹஜ்ரத் நேற்று(26-11-2008) காலை காலமானார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

தகவல்:Dr.ரபீயுத்தீன்

26
Nov

நீடூர்-நெய்வாசல், பள்ளிவாசல்தெரு அஹ்மது தம்பி-அஷ்ரப் அலி ஆகியோரின் தாயார் நேற்று(25-11-2008) இரவு காலமானார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

25
Nov

24
Nov

நீடூர்-நெய்வாசல் புதுமனைத்தெரு ரபி, பைசல் ஆகியோரின் தந்தை ஹாஜி ஷம்சுத்தீன் நேற்று(23-11-2008) இரவு காலமானார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

தகவல்:M.A.மர்ஜூக்

23
Nov

Episode-14

To Download Right Click & Save Target As

16
Nov

Episode-13

To Download Right Click & Save Target As

14
Nov

நீடூர் புகை வண்டி நிலையம் நீடிக்குமா?

11
Nov

 மௌலான அபுல் கலாம் ஆசாத் – நவீன கல்வியின் சிற்பி!

மௌலான அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த தினமான நவம்பர் 11ஆம் தேதி தேச கல்வி தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நமது நாட்டின் கல்வித் துறையை வடிவமைத்ததில் இவருக்கு பெரும் பங்குண்டு. சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக பொறுப்பேற்று 11 ஆண்டுகள் இத்துறையை வழிநடத்திச் சென்றார்.
ஆசாத் அவர்கள்தான் தேச கல்வி முறைக்காக முதலில் குரல் எழுப்பியவர். தேச கல்வி கொள்கைக்கு (1986) இதுதான் அடிப்படையாக விளங்குகிறது. இந்த கொள்கை 1992இல் புதுப்பிக்கப்பட்டது. அனைத்து மாணவர்களுக்கும், சாதி, மத இட, பால் பாகுபாடின்றி தரமான கல்வியை குறிப்பிட்ட நிலை வரை அளிக்க வேண்டும் என்று ஆசாத் வலியுறுத்தினார். (Read More…)
10
Nov

பங்கேற்கத் தவறாதீர்கள்!

9
Nov

Episode-12

To Download Right Click & Save Target As

9
Nov

ெஞ்சார வாழ்த்துகிறோம்!-M.ஷேக் அலாவுதீன் K.S.A

6
Nov

 

முகம்மது அன்சாரி, தஞ்சை.

ன் ஒரு இஸ்லாமியன். எந்தத் தீவிரவாத இயக்கங்களுடனோ அல்லது அத்தகைய கொள்கைகளிலோ சிறிதளவும் பற்றில்லாதவன். இந்திய இறையாண்மையிலும், அதன் மதச்சார்பற்ற கொள்கைகளிலும் பெருமதிப்பு வைத்திருப்பவன்.  ஆனால் சில வருடங்களுக்கு முன்பு என்னை ஒரு தோழனாகவும், சக மனிதனாகவும் பார்த்த பலரிடம் இன்று ஏதோ ஒரு சொல்ல முடியாத தயக்கமும், எதிர்ப்புணர்ச்சியும் இருப்பதை என்னால் உணர முடிகிறது. இது எனக்குப் பெரும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. சொந்த சகோதரர்களிடமிருந்தே விலகி நிற்கும் வலி ஏற்படுகிறது?

து உங்களுக்கு மட்டுமல்ல. அமெரிக்க ஜனாதிபதியாக எதிர்காலத்தில் வரப் போவதற்கான பிரகாசமான வாய்ப்புள்ள ஒபாமாவுக்கே ஏற்படும் உணர்வுதான். அவர் பெயரின் நடுவில் உள்ள சொல் “ஹூசேன்”. அதனால் அவரைப் பற்றிய மதரீதியான பிரச்சாரங்கள் அங்கே வெறுப்புடன் நடத்தப்படுகின்றன. அவரை எதிர்த்துப் போட்டியிடும் மெக்கேய்னிடம் ஒரு பெண்மணி இப்படி கேட்டிருக்கிறார். “ஒபாமா ஒரு அரேபியர் என்று கேள்விப்பட்டேனே?” அதற்கு மெக்கேய்ன் சொன்ன பதில் “இல்லை மேடம். அவர் ஒரு நாகரிகமான குடும்பத் தலைவர்”. இதற்கு என்ன அர்த்தம்? ஒரு அரேபியரால் நாகரிகமான குடும்பத்தலைவராக இருக்க முடியாது என்பதுதானே? இஸ்லாமியர்கள் எல்லோரையும் தீவிரவாதிகளாகச் சித்திரிப்பதில் மீடியாவுக்கும், அரசியல்வாதிகளுக்கும்  பெரிய பங்கு இருக்கிறது. அதனுடைய விளைவுதான் உங்களின் வலி. கவலைப்படாதீர்கள். உண்மைதான் கடைசியில் வெல்லும்.