
G.M.பனாத்வாலா சாஹிப் அவர்களுக்கு பேங்காக்கில் காயிப் ஜனாஸா (மறைவு)தொழுகை இன்று ஜும்ஆ தொழுகைக்குப்பின் நடைபெற்றது.
தகவல்:உபைதுல்லாஹ், பேங்காக்
மயிலாடுதுறை வட்டம், தேரிழந்தூர் கடைவீதியில் “மஸ்ஜித் அக்ஸா” வக்த் பள்ளிவாசல் திறப்புவிழா இன்ஷா அல்லாஹ், 29-06-2008 ஞாயிறன்று நடைபெற உள்ளது.
தகவல்: உபைதுல்லாஹ், பேங்காக்



நீடூர்-நெய்வாசல் ரைஸ்மில்தெரு மர்ஹூம் ஹசன் முஹம்மது அவர்களின் மருமகனும், ஜெகபர் அலியின் மச்சானுமான முஹம்மது அன்சாரி இன்று(08-06-2008) இரவு காலமானார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
தகவல்: பைஜுர் ஹாதி
நீடூர்-நெய்வாசல் பள்ளிவாசல்தெரு ராஜா(ஹிலுருதீன்)-அப்துல் ஹக் ஆகியோரின் தாயார் இன்று(08-06-2008) காலை காலமானார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
தகவல்: STD ஜெகபர் அலி
நாம் வாழும் இப்புவி நாளுக்கு நாள் வெப்பமடைவதால் ஏற்படும் தொடர் பாதிப்பு உலக அளவில் உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது.
இப்புவியின் வட தென் துருவப் பகுதிகளிலும், இமாலயம் போன்ற நெடுதுயர்ந்த மலைகளின் சிகரங்களையும் வெள்ளாடை போர்த்தி அழகூட்டி அலங்கரித்துக் கொண்டிருக்கும் பனிப்பாறைகள் மெதுவாக உருகி, சொட்டுச் சொட்டாக விழுந்து, சிறு சிறு நீரோடைகளாகி, அவைகள் ஒன்றாகி ஆறாகப் பெருக்கெடுத்து பெரும் நதிகளாகி, நம் உயிர் வாழ்க்கைக்கு ஆதாரமான விவசாயத்தையும், எண்ணற்ற இயற்கை வளங்களையும் வாரி வழங்கி வருகின்றன.








