மிஸ்பாஹி உலமா பேரவை பொதுக்குழுக் கூட்டம் நீடூர்-நெய்வாசல் J.M.H.நிகாஹ் மகாலில் இன்று(29-04-2008) மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மிஸ்பாஹிகள் பெருமளவில் பங்கேற்றார்கள். நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக மௌலவி O.M.அப்துல் காதிர் அவர்கள் கலந்துக்கொண்டு நீடூர்ஆன்லைன்.காம் இணையதளத்தை மிஸ்பாஹிகளுக்கு அறிமுகப்படுத்தி இவ்விணையதளத்திற்கு அனைவரது ஆக்கங்களையும் அனுப்பி உலகளாவிய மார்க்க சேவையாற்றுமாறு வேண்டினார்கள். மாலையில் மிஸ்பாஹிகளுக்கு கணிப்பொறி அறிமுகப் பயிற்சி ஜாமிஆ மிஸ்பாஹுல்ஹுதா கணிணி மையத்தில் நடைபெற்றது.
பேரவையின் தலைவராக லால்பேட்டை மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மௌலவி A.E.அப்துர்ரஹ்மான் மிஸ்பாஹி அவர்களும், செயலாளராக மேலப்பாளையம் உதுமானியா அரபிக்கல்லூரியின் முதல்வர் மௌலவி S.ஹைதர் அலி மிஸ்பாஹி அவர்களும், பொருளாளராக நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மிஸ்பாஹுல்ஹுதா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மௌலவி அப்துர்ரஹ்மான் மிஸ்பாஹி அவர்களும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்கள்.
- நீடூர்-நெய்வாசலிலிருந்து எமது சிறப்பு நிருபர் M.A.முஹம்மது மர்ஜுக்