நபிகளார் வரலாறு கூறும் விழா இன்று(30-03-2008) ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ், வில்லியர்ஸ் சுர்மாரனில் சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் தமிழ்பேசும் மார்க்க அறிஞர்களின் சிறப்பு சொற்பொழிவும், சிறுவர்-சிறுமியரின் திருமறை ஓதுதலும் இடம் பெற்றது.
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக சத்தியமார்க்கத்தில் சங்கமித்த லுக்மான் எனும் பிரன்ச்சு சகோதரரின் கொஞ்சும் பிரஞ்சு மொழி சொற்பொழிவு அனைவரையும் பிரமிக்க வைத்தது.




இன்ஷா அல்லாஹ் நாளை(31-03-2008) திங்கள் இரவு இஷாவிற்குப் பிறகு தேரா துபை கோட்டைப் பள்ளிவாசலில் தாயகத்திலிருந்து குவைத் சீரத் சொற்பொழிவு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு வருகை தந்திருக்கும் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர், நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதாவின் முன்னாள் முதல்வர், வீரசோழன் ஹைராத்துல் இஸ்லாம் அரபிக்கல்லூரியின் முதல்வர், நாடறிந்த நாவலர் மெளலானா மெளலவி O.M.அப்துல் காதிர் பாகவி ஹஜ்ரத் அவர்களின் சிறப்பு சொற்பொழிவு நடைபெற உள்ளது.









