நீடூர்-நெய்வாசல் அரபித்தெரு M.R.P.கமால் இன்று(28-02-2008) இரவு காலமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாத் பேச்சுப் போட்டிகள்
அமீரகத்தின் வணிகத் தலைநகராக விளங்கும் துபாயில் கால் நூற்றாண்டுக்கும் அதிகமாக கல்வி மற்றும் சமூக மேம்பாட்டுப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் (ஈமான்) வருடந்தோறும் மீலாத் பெருவிழாவை முன்னிட்டு பேச்சுப் போட்டிகளை நடத்தி வருகிறது. இதுகுறித்து ஈமான் பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ.லியாக்கத் அலி செய்தியாளர்களிடம் தெரிவித்த போட்டிகள் குறித்த விபரமாவது:
நீடூர்-நெய்வாசல் (அல்நாசர் STD) S.நஜீர் அஹமது அவர்களின் மைத்துனர் நெல்லிக்குப்பம் தாஜுதீன் இன்று(25-02-2008)பெங்களூரில் காலமானார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
தகவல்:அபூ அய்மன்
நீடூர் அ.மு.சயீத் குடும்பத்தினர் நன்றி கூறுகிறார்கள்
உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தங்களின் இரங்கலைத் தெரிவித்து வரும் உள்ளுர், வெளியூர் சமுதாய மக்கள் அனைவருக்கும், உணர்வுகளை வெளியிடும் பாலமாய் சிறப்பான பணியாற்றும் நீடூர்ஆன்லைன்.காம் இணையதளக் குழுவினருக்கும் எங்களது உளமார்ந்த நன்றியையும் துஆக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
-நீடூர் அ.மு.சயீத் குடும்பத்தினர்
Real Player Required 
நீடூர்-நெய்வாசல் பள்ளிவாசல் தெரு நூரி வீடு மர்ஹூம் முஹம்மது சாலிஹ் அவர்களின் மனைவியும் M.S.முபாரக், ரபீக் தாயாருமான ரமீஜான் பீவி இன்று(21-02-2008) காலை காலமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
தகவல்:M.A.ஜப்ருதீன்
நீடூர்-நெய்வாசல் ரைஸ்மில் தெரு A.K.S.ஜின்னா இன்று(20-02-2008) மாலை காலமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
தகவல்:M.A.ஜப்ருதீன்
Real Player Required 
Real Player Required 

நம் அன்பு குழந்தைகள் இன்ஷா அல்லாஹ் பள்ளி ஆண்டு இறுதி தேர்வை சந்திக்கும் காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. ஆசிரியர்களும், பெற்றோர்களும், மாணவர்களும் தத்தமது கடமையை இனிதே நிறைவேற்ற தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். (Read More…)
“நெஞ்சில் நிறைந்த நீடுர் சயீத்” நூல் வெளியீட்டு விழா சிறப்புடன் நடைபெற எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இறைஞ்சுகிறேன்.
நூலாசிரியர் சகோதரர் அ.மா. சாமி, சகோதரர் டாக்டர் அய்யூப் மற்றும் விழா ஏற்பாட்டாளர்கள் அனைவரும் பெரும் பாராட்டுக்குரியவர்கள்.
விழா நிகழ்வுகளை முழுமையாக தங்கள் வலைத்தளத்தில் பார்க்கும் ஆவலுடன் ….
- டாக்டர் ஹிமானா சையித், சிங்கப்பூர்

எகிப்து அருகில் கப்பல் நங்கூரம் பாய்ச்சியதன் காரணத்தால் கடல் வழி இணையதள மற்றும் தொலைபேசி கேபிள்கள் துண்டிக்கப்பட்டுள்ளதால் மத்திய கிழக்கு, எகிப்து மற்றும் இந்தியாவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
முக்கியமான இணையதள சேவைகள் தடைப்பட்டுள்ளன.
வீட்டு பயனாளிகளுக்கும், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
துண்டிக்கப்பட்ட கேபிள்களை சரி செய்யும் பணி துவங்கிவிட்ட போதும், நிலைமை சீரடைய சில வாரங்கள் ஆகலாம் என்று அமீரக தொலைத்தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.










