To Download Right Click & Save Target as
கடையநல்லூரில் ரியாலுஸ் ஸாலிஹாத் மகளிர் அரபிக் கல்லூரி ஆலிமா பட்டமளிப்பு விழா மற்றும் 18 வது ஆண்டு நிறைவு விழா 02.09.2007 ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
விழாவிற்கு ரியாலுஸ் ஸாலிஹாத் மகளிர் அரபிக் கல்லூரி தலைவர் மெளலவி எஸ்.எம். ஹாஜா முயீனுத்தீன் அஸ்லமி ஹழரத் தலைமை தாங்கி பட்டமளிப்புப் பேருரை நிகழ்த்துகிறார். (Read More…)
பராஅத் இரவு சிறப்பு சொற்பொழிவு முஹம்மது இஸ்மாயில் பாகவி
நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மஸ்ஜிதிலிருந்து
நீடூர்ஆன்லைன் ரிப்போர்ட்டர் முஹாஸின் 28-08-2007
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நமது நீண்ட நாளைய கனவு நினைவாகும் வகையில் உலகத் தமிழ்ப் பண்பாட்டுக் கழகத் தலைவர் முனைவர் ரபீயுத்தீன் அவர்களால் நீடூரில் கல்லூரி துவங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் முதல் கட்டமாக இன்று காலை பஜ்ருத் தொழுகைக்குப் பின் நீடூர் ஜாமிஆ மஸ்ஜித் பேஷ் இமாம் மெளலவி பக்ருத்தீன் ஆலிம் பாகவி அவர்களால் துஆ ஓதப் பட்டது. விரைவில் முழுமை பெற உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும் துஆ செய்வோம்.
நீடூர்-நெய்வாசல் மேலத்தெரு வடசா வீடு சாஹுல் ஹமீது தகப்பனார் அப்துல் மஜீது இன்று காலை காலமாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
நீடூர்-நெய்வாசல் J.M.H.ரோடு மர்ஹூம் பானி ஹஜ்ரத் அவர்களின் மகளாரும், மர்ஹூம் பா.மு.ஹபீப் ரஹ்மான் அவர்களின் மனைவியும், மவ்லவி கமாலுதீன் மிஸ்பாஹி அவர்களின் தாயாருமான உம்முல்ஹுதா அவர்கள் இன்று நண்பகல் 12-மணிக்கு காலமாகிவிட்டார்கள். அன்னாரின் ஜனாஸா இன்றிரவு 9-மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

சமீப காலமாக நீடூரில் ப்ராட்பேண்ட் இணைப்பு பெறுவது மிகவும் இலகுவாக்கப் பட்டுள்ளது. விண்ணப்பித்த 2 – 3 நாட்களிலேயே இணைப்பு கொடுக்கப் பட்டு விடுகிறது. Dialup-ஐ விட ப்ராட்பேண்ட் இணைப்பு ஒப்பிட்டு நோக்கும்போது மிகவும் சிக்கனமானதுதான். மாதம் ரூபாய்.250.00 திட்டத்தில் (Read More…)















