• Page 1 of 2
  • 1
  • 2
  • >
6
Aug

Please Download PDF File &  Spread the message to every one.

அன்பிற்கினிய நீடூர்ஆன்லைன்.காம் இணையதளத்தின் நல்ல நோக்கங்களுக்கு துணை நிற்கும் சமூக ஆர்வலர்களே! ஊர் சொந்தங்களே!! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம… வபரக்க…

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நமது நீண்டகால கனவுகளில் ஒன்றான இஸ்லாமிய நிதியம் கடந்த 23-07-2010 அன்று மஸ்ஜிதுல் மிஸ்பாஹுல் ஹுதாவில் துவக்கப் பட்டது. குறைவான எண்ணிக்கையில் கூட்டம் இருந்தாலும் நிறைவான நன்கொடைகளுடன் புதிய சகாப்தம் நோக்கி இஸ்லாமிய நிதியத்தின் பயணம் துவங்கியது.

இஸ்லாமிய நிதியம் -  இது ஒரு நமக்கு நாமே திட்டம்.

நமது நன்கொடைகளை ஒன்று திரட்டி சமுதாய நலனுக்காக உதவி செய்வது அதிலும் குறிப்பாக கல்வி மற்றும் மருத்துவ உதவி செய்வது எதிர்காலத்தில் வட்டி இல்லாக் கடன் வழங்குவதுதான் நிதியத்தின் முக்கிய நோக்கம்.

நிதியத்தின் நன்கொடையாளர்கள் அனைவருமே உறுப்பினர்களாவார்கள்.

நிதியத்தின் நிர்வாகத்தை நீடூர்ஆன்லைன்.காம், உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு கவனிக்கும்.

விவரமான வரவு செலவு கணக்குகள் உறுப்பினர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படும்.

உதவி பெறுவோர் கவுரவம் பாதிக்காதவாறு, அவர்களின் பெயர் விவரம் தவிர்த்து கணக்குகள் நமது இணையதளத்தில் வெளியிடப்படும்.

இது ஜமாஅத் ரீதியான பொருளாதார மேம்பாட்டுத் திட்டம். ஆதலால் பயனாளிகள் நமதூர் ஜமாஅத்தைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

உறுப்பினர்களின் பரிந்துரைகளுக்கு முக்கியத்துவம் தரப்படும்.

இதுவரை 10 நபர்களிடமிருந்து ரூபாய்.55,000.00 ஆரம்பகால நன்கொடையாக பெற்றிருக்கிறோம்.

இது பல்கிப் பெருகும் வாய்ப்புகள் மிக அருகாமையில் உள்ளன.

இன்னும்  தயங்காமல் உங்கள் சமுதாயப் பங்களிப்பை இன்றே நமது nidiyam@niduronline.com என்கிற மின்னஞ்சலுக்கு தெரிவுப் படுத்துங்கள்.

அல்லாஹ்வின் பாதையில் அமானிதம் பேணப்படும்.

26
Jul

“ஊரில் இருந்ததாய் உணர்ந்தோம்!” நேரலைப் பற்றி ஏராளமான தொலைபேசி அழைப்புகள்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் JMH அரபிக் கல்லூரியின் 64-வது பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிகளை நமது நீடூர்ஆன்லைன்.காம் இணையதளத்தில் நேரலையாக ஒலிபரப்பினோம்.

உலகெங்கிலும் உள்ள உள்ளூர் மற்றும் வெளியூர் நண்பர்கள் நிகழ்ச்சியைக் கண்டு தங்களின் மகிழ்ச்சியை தொலைபேசி மூலம் வெளிப்படுத்தினார்கள்.

நன்றி நவின்றார்கள். உளப்பூர்வமாக துஆ செய்தார்கள்.

தொழில்நுட்பம் சார்ந்த பணிகளின் காரணமாக எல்லோரது அழைப்புகளுக்கு பதிலளிக்க இயலாமைக்கு வருந்துகிறோம்.

உங்களின் ஆர்வமும், கருத்துகளும் எங்களின் பணிகளை இன்ஷா அல்லாஹ் செம்மையாக்கும் என்று நம்புகிறோம்.

நிகழ்ச்சி ஒலிபரப்பிற்கு உதவிய BSNL Technicians, வளரும் தொழில்நுட்பக் கலைஞர் M.A.ரிள்வான்,J.P.ஜவ்ஹர் மற்றும் ஒத்துழைப்பு நல்கிய ஜாமிஆவின் நிர்வாகத்தினருக்கும், உலமா பெருமக்களுக்கும் நிகழ்ச்சியைக் கண்டு களித்து மகிழ்ச்சியை தெரிவித்த அனைத்துலக ஆன்லைன் ஆர்வலர்களுக்கும் நன்றியை உரித்தாக்குகிறோம்.

பெருமை அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே….அல்ஹம்து லில்லாஹ்!

22
Jan

கடந்த 19-08-2008 மாலை நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மஸ்ஜிதில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் ஹசன் அலி M.L.A அவர்கள் ஆற்றிய உரை

23
Nov

நீடூர் மற்றும் நீடூர்-நெய்வாசலிலிருந்து இவ்வாண்டு(2009) புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவோர் பட்டியல்:

  • நீடூர் மஜீது காலனி முஹம்மது மூஸா, மகளார் மற்றும் சகோதரியுடன்.
  • நீடூர் வடக்குத்தெரு மர்ஹும் பகுருதீன் அவர்களின் மனனவி.
  • நீடூர் ரபீக் அவர்களின் மனைவி பாத்திமா.
  • நீடூர் மெயின்ரோடு அப்துல் ஹமீது.
  • நீடூர் சலவாத் பாவா காலனி சித்தீக் அவர்கள் தனது துணைவியாருடன்.
  • P.M. நகர் சரபுஜ்ஜமான் தனது தாயார் மற்றும் துணைவியாருடன்.
  • நீடூர்-நெய்வாசல் மஷாயிக் தெரு அன்சாரி.
  • நீடூர்-நெய்வாசல் ஜின்னாத் தெரு செல்ல மரைக்கான் முபாரக் அவர்களின் துணைவியார் உஹது நிஸா.
  • நீடூர்-நெய்வாசல் புதுமனைத் தெரு அமானுல்லாஹ்.
  • நீடூர்-நெய்வாசல் ஜின்னாத் தெரு S.A.மன்சூர் அலி – அப்துல் ரவூப் ஆகியோரின் சகோதரி மும்தாஜ் பேகம் தனது மகனார் ஜமால் முஹம்மதுடன்.
  • நீடூர் ஹலிநூர் காலனி கியாசுதீன் தனது துணைவியாருடன்
  • நீடூர்-நெய்வாசல் மேலத்தெரு மர்ஹூம் S.நூர் முஹம்மது அவர்களின் மகனார் நஜீர் அஹமது தனது மனைவி நஸீராவுடன்(அபுதாபியிலிருந்து)
  • நீடூர்-நெய்வாசல் ரயிலடித்தெரு மர்ஹும் சி.க.ஷர்புத்தீன் அவர்களின் மகளார் நஜீர் அஹமது & சகோதரர்களின் சகோதரி நர்கீஸ் பேகம் தனது கணவர் அப்துல் அஜீஸ் மற்றும் மகளுடன் ரியாதிலிருந்து புனித ஹஜ்ஜை நிறைவேற்ற இருக்கின்றார்கள். 

தகவல்: மெளலவி A.முஹம்மது இஸ்மாயில் பாகவி, முதல்வர் JMHAC நீடூர்-நெய்வாசல் அல்லாஹ் இவர்களின் ஹஜ்ஜை ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக ஆக்குவானாக!

குறிப்பு: மேற்கண்ட பட்டியலில் விடுபட்டோர் பற்றிய விவரம் அறிவோர் admin@niduronline.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்ய வேண்டுகிறோம்.

21
Aug

DeenEngCollege

4
Aug

நீடூர்-நெய்வாசல் JMH அரபிக் கல்லூரியின் 63-வது பட்டமளிப்பு விழா கடந்த 02-08-2009 ஞாயிறன்று மிக சிறப்பாக நடைபெற்றது.

இன்ஷா அல்லாஹ் விரைவில் அதன் வீடியோக்களை காணலாம்.

8
Jul

7
Jul

நீடூர் புகைவண்டி நிலையம் 06-07-2009 அன்றைய நிலை

4
Jul

iobnidur

சமீபத்தில் நீடூர் இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கி(IOB)யில் நடந்த மோசடி சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. ஆண் துணை இல்லாத வீடுகளில் குடும்ப செலவுக்கு பணம் எடுக்க பெண்களே வங்கிகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். அதன்படி தனது தேவைகளை நிறைவேற்ற எப்போதும்போல் ஒரு முஸ்லிம் பெண்மணி சில வாரங்களுக்கு முன் நீடூர் இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கி(IOB)க்கு சென்று பணம் எடுப்பதற்கான விண்ணப்பத்தில் கையெழுத்திட்டு வங்கி ஊழியரிடம் கொடுத்திருக்கிறார். (Read More…)

19
Apr

vote

3 ஆண்டுகளுக்கொரு முறை நடைபெறும் நீடூர்-நெய்வாசல் நிர்வாக சபையின் தேர்தல் கடந்த 12-04-2009 ஞாயிறன்று நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மஸ்ஜிதில் வக்ப் ஆய்வாளர் முன்னிலையில் நடைபெற்றது. டிரஸ்டியாக ஹாஜி வீதி அல்ஹாஜ் அப்துல் ரஷீது ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். ரயிலடித்தெரு அப்துல் ஹாலித் அவர்களும், ஜின்னாத்தெரு முஹம்மது அலி அவர்களும் முத்தவல்லி பதவிக்கு முன்மொழியப் பட்டார்கள். வழமையான Selection முறை மாற்றப்பட்டு Election முறையில் வாக்குப்பதிவு நடந்தது.

(Read More…)

28
Nov

2008-ஆம் ஆண்டு நீடூர்-நெய்வாசலிலிருந்து புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவோர்:

1.மஷாயிக்தெரு வாப்பு வீடு நஜிமுத்தீன் மற்றும் அவர்களது துணைவியார் சாஜிதா பேகம்
2. ரைஸ்மில்தெரு கமாலுத்தீன்  மற்றும் அவர்களது துணைவியார் சர்புன்னிஸா
3. ஹாஜித்தெரு அப்துல் ஹலீம் மற்றும் அவர்களது துணைவியார் ஷம்சாத் பேகம்
4. நீடூர் மஜீது காலனி செய்யிது மகனார் சாதிக்குல் அமீன் மற்றும் அவர்களது துணைவியார்

5. மேலத்தெரு மர்ஹும் அப்துல்ஜலீல் அவர்களின் மனைவி (பிரான்ஸ்) அய்யூப் சகோதரர்களின் தயார் மும்தாஜ் பேகம்
6. புதுக்குளத்தெரு முஹம்மது இக்பால் அவர்களது துணைவியார்                                         

7. நீடூர் மஜீது காலனி T.S.R. அய்யூப் மற்றும் அவர்களது துணைவியார்
8. பள்ளிவாசல்தெரு மர்ஹும் அலாவுதீன்பாய் அவர்களின் மகனார் ஜெகபர் சாதிக்(குவைத்திலிருந்து)

9.நீடூர் மெயின் ரோடு அல்ஹாஜ் T.S.R.அப்துல் ரஹீம் அவர்களின் மகனார் ஹாஜி முஹம்மது பாரூக் மற்றும் அவர்களது துணைவியார் ஹாஜ்ஜா நூருல் அய்ன்.

10. J.M.H. ரோடு மர்ஹூம் K.R.பஜல் அவர்களின் துணைவியார்

1
Oct

ஈகைத் திருநாள் தொழுகை நீடூர்-நெய்வாசல் புதிய பள்ளிவாசலில் இன்று காலை 9:15 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது. இந்த இனிய  வேளையில் நீடூர் & நெய்வாசல் (நெஞ்சங்களின்) ஜமாஅத்தார்களின் நூறாண்டு கால ஒற்றுமை நினைவூட்டப் பட்டது.

01-10-1908 நீடூர் பள்ளிவாசலில் நெய்வாசல் ஜமாஅத்தார்களும் இணைந்து பெருநாள் தொழுகை நடத்தியுள்ளார்கள்.

01-10-2008 சரியாக நூறாண்டில் இன்று நீடூர் ஜமாஅத்தார்கள் நெய்வாசல் பள்ளிவாசலில் பெருநாள் தொழுகையை தொழுது வரலாறுப் படைத்திருக்கின்றார்கள்.

இரண்டு ஊர் ஜமாஅத்தார்களும் பெருமகிழ்வோடு ஆரத்தழுவி ஆலிங்கனம் செய்து பெருநாளை ஒற்றுமையுடன் கொண்டாடினார்கள்.

நீடூர் ஜமாஅத்தார்களை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன. குளிர் பானங்கள் பரிமாறப் பட்டன.

16
Aug

8
Aug

26
May

நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மஸ்ஜித் திறப்புவிழா மலரில் தங்களின் ஆக்கம் இடம் பெற…

உங்களின் ஆக்கங்களை உடன் அனுப்பி வையுங்கள்.

கீழ்காணும் இலக்கங்களில் மலர்க்குழுவை தொடர்பு கொள்ளுங்கள்:

ஹாஜி S.A.இக்பால்  கைபேசி: +919443123763

ஜாமிஆ மஸ்ஜித் தொலைபேசி: +914364250107

 

16
May

deeniyat.jpg

ஜாமிஆ மிஸ்பாஹுல்ஹுதா அரபிக் கல்லூரியில் கோடைக்கால சிறப்பு தீனியாத் வகுப்பு நடைபெற்று வருகிறது. உள்ளூர் மாணவர்கள் ஆர்வமுடன் மார்க்கம் பயில்கிறார்கள்.

29
Apr

img0270a.jpgமிஸ்பாஹி உலமா பேரவை பொதுக்குழுக் கூட்டம் நீடூர்-நெய்வாசல் J.M.H.நிகாஹ் மகாலில் இன்று(29-04-2008) மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மிஸ்பாஹிகள் பெருமளவில் பங்கேற்றார்கள். நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக மௌலவி O.M.அப்துல் காதிர் அவர்கள் கலந்துக்கொண்டு நீடூர்ஆன்லைன்.காம் இணையதளத்தை மிஸ்பாஹிகளுக்கு அறிமுகப்படுத்தி இவ்விணையதளத்திற்கு அனைவரது ஆக்கங்களையும் அனுப்பி உலகளாவிய மார்க்க சேவையாற்றுமாறு வேண்டினார்கள். மாலையில் மிஸ்பாஹிகளுக்கு கணிப்பொறி அறிமுகப் பயிற்சி ஜாமிஆ மிஸ்பாஹுல்ஹுதா கணிணி மையத்தில் நடைபெற்றது.

பேரவையின் தலைவராக லால்பேட்டை மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மௌலவி A.E.அப்துர்ரஹ்மான் மிஸ்பாஹி அவர்களும், செயலாளராக மேலப்பாளையம் உதுமானியா அரபிக்கல்லூரியின் முதல்வர் மௌலவி S.ஹைதர் அலி மிஸ்பாஹி அவர்களும், பொருளாளராக நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மிஸ்பாஹுல்ஹுதா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மௌலவி அப்துர்ரஹ்மான் மிஸ்பாஹி அவர்களும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்கள்.

- நீடூர்-நெய்வாசலிலிருந்து எமது சிறப்பு நிருபர் M.A.முஹம்மது மர்ஜுக்

2
Jan

Real Player Required camera.gif

31
Dec

நீடூர்-நெய்வாசலிலிருந்து 2007-ல் ஹஜ் கடமையை நிறைவேற்றியவர்கள் விவரம்:
(Read More…)

30
Dec

நீடூரில் “உம்முல் குரா” நிஸ்வான் மத்ரஸா திறப்பு விழா 30-12-2007 அன்று சிறப்பாக நடைபெற்றது.
ஜமாஅத்தார்களும், சமுதாய ஆர்வலர்களும் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்.

  • Page 1 of 2
  • 1
  • 2
  • >