“நபிகளாரின் மரணம்”-ஜும்ஆ முரசு 4
பெளர்ணமி – ஜும்ஆ முரசு 3
தொழில்நுட்பக் காரணங்களால் தாமதமாகப் பிரசுரிக்கப் படுகிறது.
உலகமே உன் கையில்! - ஜும்ஆ முரசு 1
பதிவிறக்கம் செய்து அச்செடுத்து தங்களூர் பேஷ் இமாம் அவர்களிடம் கொடுத்து 30-01-2009 அன்று ஜும்ஆப் பேருரையாற்ற வகை செய்யுங்கள்.

முஸ்லிம்களின் ஒற்றுமைக்கும் மேம்பாட்டிற்கும் வலிமை சேர்க்கின்ற ஜும்ஆப் பேருரைகள் சீர் செய்யப்பட்டு மார்க்கம், சமூகம், நாட்டு நடப்புகள், உலக நிகழ்வுகளை பிரதிபலிக்கின்ற தரம் மிக்கவையாக அனைத்து ஊர் ஜமாஅத்துகளிலும் ஒரேக் குரலில் ஒலிக்க வேண்டும் என்கிற சமுதாய ஆர்வலர்களின் பல்லாண்டுக் காலக் கனவு நனவாகும் வகையில் அதன் முதன் முயற்சியாக “மிஸ்பாஹிகள் பேரவை”யில் முடிவு செய்யப்பட்டு இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் வெள்ளி முதல் இரு வாரங்களுக்கு ஒரு முறை தமிழகத்தின் தலைச்சிறந்த மார்க்க அறிஞர்களின் குழுவால் ஜும்ஆப் பேருரை தயாரிக்கப் பட்டு முன்னதாகவே நமது நீடூர்ஆன்லைன்.காம் இணையதளத்தில் வெளியிடப்படும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த ஜும்ஆப் பேருரைகளை பிரதி எடுத்து அனைத்து ஊர் இமாம் பெருமக்களும் இந்த முயற்சிக்கு துணை நின்று ஒரே குரலில் ஜும்ஆப் பேருரைகளை அமைத்துக் கொண்டு இந்த சீரிய சேவைக்கு ஆலோசனைகளை வழங்கி அல்லாஹ்வின் திருப் பொருத்ததைப் பெறுமாறு வேண்டுகிறோம்.
இன்ஷா அல்லாஹ் சமூக ஆர்வலர்கள் வெளியிட்டுள்ள கருத்தின்படி இம்முயற்சியின் விரிவாக்கம் தமிழக ஜமாஅத்துல் உலமா சபை மூலம் மாநிலம் முழுமைக்குமாக இருக்கும்.
உலகலாவிய ஊர்ஜிதமான முக்கிய நிகழ்வுகளை தமிழில் குழுவின் பார்வைக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.





