6
Aug

Get the Flash Player to see this content.

6
Aug

Please Download PDF File &  Spread the message to every one.

அன்பிற்கினிய நீடூர்ஆன்லைன்.காம் இணையதளத்தின் நல்ல நோக்கங்களுக்கு துணை நிற்கும் சமூக ஆர்வலர்களே! ஊர் சொந்தங்களே!! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம… வபரக்க…

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நமது நீண்டகால கனவுகளில் ஒன்றான இஸ்லாமிய நிதியம் கடந்த 23-07-2010 அன்று மஸ்ஜிதுல் மிஸ்பாஹுல் ஹுதாவில் துவக்கப் பட்டது. குறைவான எண்ணிக்கையில் கூட்டம் இருந்தாலும் நிறைவான நன்கொடைகளுடன் புதிய சகாப்தம் நோக்கி இஸ்லாமிய நிதியத்தின் பயணம் துவங்கியது.

இஸ்லாமிய நிதியம் -  இது ஒரு நமக்கு நாமே திட்டம்.

நமது நன்கொடைகளை ஒன்று திரட்டி சமுதாய நலனுக்காக உதவி செய்வது அதிலும் குறிப்பாக கல்வி மற்றும் மருத்துவ உதவி செய்வது எதிர்காலத்தில் வட்டி இல்லாக் கடன் வழங்குவதுதான் நிதியத்தின் முக்கிய நோக்கம்.

நிதியத்தின் நன்கொடையாளர்கள் அனைவருமே உறுப்பினர்களாவார்கள்.

நிதியத்தின் நிர்வாகத்தை நீடூர்ஆன்லைன்.காம், உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு கவனிக்கும்.

விவரமான வரவு செலவு கணக்குகள் உறுப்பினர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படும்.

உதவி பெறுவோர் கவுரவம் பாதிக்காதவாறு, அவர்களின் பெயர் விவரம் தவிர்த்து கணக்குகள் நமது இணையதளத்தில் வெளியிடப்படும்.

இது ஜமாஅத் ரீதியான பொருளாதார மேம்பாட்டுத் திட்டம். ஆதலால் பயனாளிகள் நமதூர் ஜமாஅத்தைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

உறுப்பினர்களின் பரிந்துரைகளுக்கு முக்கியத்துவம் தரப்படும்.

இதுவரை 10 நபர்களிடமிருந்து ரூபாய்.55,000.00 ஆரம்பகால நன்கொடையாக பெற்றிருக்கிறோம்.

இது பல்கிப் பெருகும் வாய்ப்புகள் மிக அருகாமையில் உள்ளன.

இன்னும்  தயங்காமல் உங்கள் சமுதாயப் பங்களிப்பை இன்றே நமது nidiyam@niduronline.com என்கிற மின்னஞ்சலுக்கு தெரிவுப் படுத்துங்கள்.

அல்லாஹ்வின் பாதையில் அமானிதம் பேணப்படும்.

29
Jan

in.gif

அன்று மிதி வண்டியில் வந்தவன் இன்று ஹீரோ ஹோண்டாவில் வருகிறான்.
அந்த அளவிற்கு வாடிக்கையாளர்கள்.

வழமையாய் வருபவனைக் காணோம். புதிது புதிதாய் ஆட்கள். அனைவரும் அவனால் வேலைக்கு அமர்த்தப்பட்ட ஆட்கள்.
அந்த அளவிற்கு வியாபாரத்தில் முன்னேற்றம்.

இப்படி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து நமது ஜமா அத் வீதிகளை வலம் வருபவர்கள் வேறு யாருமல்ல, (கந்து) வட்டிக்கு பணம் கொடுத்து விட்டு தினம் வசூலில் ஈடுபடும் பைனான்ஸ் கம்பெனிக்காரர்கள்தான்.

(Read More…)

30
Apr

அல்லாஹ் ஹராமாக்கிய கொடிய வட்டி இன்றைக்கு நமது சமுதாயத்தில் அனைத்து மட்டங்களிலும் நிறைந்துள்ளது என்பதைப் பற்றிய கவலை நம் அனைவருக்கும் இருக்கிறது. (Read More…)