4
Jun

 

(Read More…)

2
Nov

BavaNagar

நீடூர்-நெய்வாசல் பாவா நகர் நிஸ்வான் மத்ரஸா நிதி வசூலுக்காக முத்தவல்லி முஹம்மது யூசுப் துபை வருகை தந்துள்ளார். நிஸ்வான் மத்ரஸா கட்டிட நிதி வழங்கி அல்லாஹ்வின் அருள்பெற வேண்டுகிறார்கள்.

21
May

நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மஸ்ஜித் பூர்த்தியடைய உதவுங்கள்!

jmnew

கடந்த 25-07-2008 அன்று வெகு விமரிசையாக திறப்புவிழா கண்ட பிரமாண்டமான நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மஸ்ஜித், திறப்பு விழாவிற்குப்பின் நிதிப் பற்றாக்குறையின் காரணமாக சொல்லிக் கொள்ளும்படியாக எந்தவொரு வேலையும் செய்யப் படாமலே உள்ளதை நாம் அறிவோம்.

இடைப்பட்டக் காலத்தில் தடைப்பட்ட வேலைகளைத் தொடர, குறைந்தபட்சம் மினாரா, டூம் வேலைகளைப் பூர்த்தியாக்க ரூபாய்.7 லட்சம் செலவாகும். முனைவர் ரபீயுத்தீன், அல்ஹாஜ் T.S.R.நஜிமுத்தீன் ஆகியோர் தலா ரூபாய் 1 லட்சம் வீதம் கொடுத்து வேலைகள் துவங்க வழி செய்திருக்கின்றார்கள். இன்னும் குறைந்தபட்சம் ரூபாய். 5 லட்சம் தேவைப்படுகிறது. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி அவனது இல்லம் பூர்த்தியாக தங்களால் இயன்ற நிதியுதவி செய்து மறுமையில் அவன் தரும் அழகிய வீட்டை பரிசாக பெற்றுக் கொள்ளுமாறு  வேண்டுகிறோம்.

தகவல்: முனைவர் ரபீயுத்தீன்

12
Dec

பெண் கல்வியில் உடனடி கவனம் செலுத்திய சமூக ஆர்வலர்களுக்கு நன்றி!

செய்தியறிந்து மயிலாடுதுறை சகோதரர் முழு செலவையும் ஏற்று மருத்துவ மாணவிக்கு வரைவோலை அனுப்பி விட்டார். அல்ஹம்துலில்லாஹ்!

மருத்துவ மாணவியின் கல்வித் தொடர சமூகத்தில் பல நல்லுள்ளங்கள் தொடர்பு கொண்டு உதவி செய்யக் காத்திருக்கின்றார்கள். அனைவரது நல்லெண்ணங்களுக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!

மாணவியின் தேவையை கல்லூரியிலிருந்து சிலர் நமக்கு தெரிவித்திருந்ததைத்தான் நமது இணையதளத்தில் வெளியிட்டிருந்தோம்.

தொடர்ந்து பல்வேறு தொலைபேசிகள் அன்புத்தொல்லைகளாகத் தொடர்கின்றன. தயவு செய்து இனி தொலைபேசியில் தொடர்பு கொள்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம். மீண்டும் நன்றி! ஜஸாக்குமுல்லாஹு ஹைரன்!