நீடூர்ஆன்லைன்.காம் தளத்தை தினந்தோறும் பார்த்து வருகிறேன். குறுகிய காலத்தில் மிகவும் பிரபலமாகி வருகிறது.
அண்ணன் அ.மு.சயீத் அவர்களை அதிகம் நினைவு கூறி வருவது தளத்தின் நிர்வாகிகள் மர்ஹூம் அவர்கள் மீது வைத்திருக்கும் உண்மையான அன்பையும், நன்மதிப்பையும் வெளிப்படுத்துவதாக உள்ளது.
“அற்புதம் என்றாலும்…” பாடலை பலமுறைக் கேட்டு அதன் பொருட்சுவையில் அகமகிழ்ந்திருக்கிறேன். ஆனால் அர்த்தமுள்ள அந்த பாடல் அண்ணன் அ.மு.சயீத் அவர்களின் ஆக்கம்தான் என்பதை நீடூர்ஆன்லைன்.காம் மூலமே அறிந்தேன்.
பாடலுக்கு தனது கம்பீரமான குரல் மூலம் மெருகேற்றிய இளவல் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்களுக்கும், அதை உலகெங்கும் வாழும் சமுதாய மக்கள் அனைவருக்கும் ஒலி,ஒளி பரப்பிய நீடூர்ஆன்லைன்.காம் இணையதளக்குழுவினருக்கும் மிக்க நன்றி.
-அ.முஹம்மது அலி ஜின்னா
நீடூர்-நெய்வாசல்