21
Aug

6
Aug

Get the Flash Player to see this content.

6
Aug

Please Download PDF File &  Spread the message to every one.

அன்பிற்கினிய நீடூர்ஆன்லைன்.காம் இணையதளத்தின் நல்ல நோக்கங்களுக்கு துணை நிற்கும் சமூக ஆர்வலர்களே! ஊர் சொந்தங்களே!! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம… வபரக்க…

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நமது நீண்டகால கனவுகளில் ஒன்றான இஸ்லாமிய நிதியம் கடந்த 23-07-2010 அன்று மஸ்ஜிதுல் மிஸ்பாஹுல் ஹுதாவில் துவக்கப் பட்டது. குறைவான எண்ணிக்கையில் கூட்டம் இருந்தாலும் நிறைவான நன்கொடைகளுடன் புதிய சகாப்தம் நோக்கி இஸ்லாமிய நிதியத்தின் பயணம் துவங்கியது.

இஸ்லாமிய நிதியம் -  இது ஒரு நமக்கு நாமே திட்டம்.

நமது நன்கொடைகளை ஒன்று திரட்டி சமுதாய நலனுக்காக உதவி செய்வது அதிலும் குறிப்பாக கல்வி மற்றும் மருத்துவ உதவி செய்வது எதிர்காலத்தில் வட்டி இல்லாக் கடன் வழங்குவதுதான் நிதியத்தின் முக்கிய நோக்கம்.

நிதியத்தின் நன்கொடையாளர்கள் அனைவருமே உறுப்பினர்களாவார்கள்.

நிதியத்தின் நிர்வாகத்தை நீடூர்ஆன்லைன்.காம், உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு கவனிக்கும்.

விவரமான வரவு செலவு கணக்குகள் உறுப்பினர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படும்.

உதவி பெறுவோர் கவுரவம் பாதிக்காதவாறு, அவர்களின் பெயர் விவரம் தவிர்த்து கணக்குகள் நமது இணையதளத்தில் வெளியிடப்படும்.

இது ஜமாஅத் ரீதியான பொருளாதார மேம்பாட்டுத் திட்டம். ஆதலால் பயனாளிகள் நமதூர் ஜமாஅத்தைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

உறுப்பினர்களின் பரிந்துரைகளுக்கு முக்கியத்துவம் தரப்படும்.

இதுவரை 10 நபர்களிடமிருந்து ரூபாய்.55,000.00 ஆரம்பகால நன்கொடையாக பெற்றிருக்கிறோம்.

இது பல்கிப் பெருகும் வாய்ப்புகள் மிக அருகாமையில் உள்ளன.

இன்னும்  தயங்காமல் உங்கள் சமுதாயப் பங்களிப்பை இன்றே நமது nidiyam@niduronline.com என்கிற மின்னஞ்சலுக்கு தெரிவுப் படுத்துங்கள்.

அல்லாஹ்வின் பாதையில் அமானிதம் பேணப்படும்.

26
Jul

21
Jul

இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் 23-07-2010 காலை 10-மணியளவில் நீடூர்-நெய்வாசல் JMH  பள்ளிவாசலில் இஸ்லாமிய நிதியத்தின்(பைத்துல் மால்) ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. வெளிநாடு வாழ் சகோதரர்கள் பலரும் பங்கேற்கின்றார்கள்.

19
Jun

மிஸ்பாஹி உலமா பேரவையின்
மூன்றாவது மாநில செயற்குழு தீர்மானங்கள்

இறையருளால் 16.03.2010 செவ்வாய்க்கிழமை காலை நாகை மாவட்டம் நீடூர் நெய்வாசல் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபிக்கல்லூரியின் நிக்காஹ் மஹால் அரங்கத்தில் வைத்து மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. (Read More…)

15
Jun

இந்திய தொலைத் தொடர்பு சந்தையில் ஏற்பட்டுள்ள பெரும் போட்டி காரணமாக இனி 1 எம்பிபிஎஸ் திறன் கொண்ட வரையறையில்லா பிராட்பேண்ட் இணைப்புக்கு ரூ 299 மட்டுமே கட்டணம் என்ற நிலை தோன்றியுள்ளது.

இது பிராட்பேண்ட் பயனாளர்களை சந்தோஷப்படுத்தும் செய்தியாகும். சமீபத்தில் 3 ஜி பிராட்பேண்ட் வயர்லெஸ் சேவைக்கான ஏலம் முடிந்தது. இதில் இன்போடெல் நிறுவனம் 22 சர்க்கிள்களுக்கான உரிமத்தை வென்றுள்ளது. இந்த நிறுவனத்தைத்தான் முகேஷ் அம்பானி வாங்கியுள்ளார். அண்ணனுக்கு ஆதரவாக, ஏலத்திலிருந்தே அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் விலகிக் கொண்டது. எனவே, ஏராளமான சலுகைகளுடன் முகேஷின் ரிலையன்ஸ் நிறுவனம் பிராட்பேண்ட் சேவைகளை அளிக்கப் போகிறது.

அதே நேரம், இந்தப் போட்டியைச் சமாளிக்க, நிறைய சலுகைத் திட்டங்களை போட்டி நிறுவனங்களும் அறிவித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. ஏர்டெல், ஏர்செல், டாடா போன்ற நிறுவனங்களும் 3 ஜி பிராட்பேண்ட் சேவை அளிக்க உள்ளன. இன்னொரு பக்கம் அரசுத் துறையின் பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்களுக்கும் 3 ஜி பிராட்பேண்ட் சேவை உரிமம் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து சர்க்கிள்களிலும் இந்த சேவை கிடைக்கும். தனியார் மற்றும் அரசுத் துறை நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு பிராட்பேண்ட் சேவை அளிப்பதால், 1 எம்பிபிஎஸ் வரை வரையறையில்லா பிராட்பேண்ட் இணைப்புக்கு ரூ 299 மட்டும் செலுத்தினால் போதும் என்ற நிலை உருவாகியுள்ளது.

ஏற்கெனவே, பிஎஸ்என்எல் நிறுவனம் 2 எம்பிபிஎஸ் வரை வேகம் கொண்ட பிராட்பேண்ட் இணைப்புக்கு ரூ 1350 வசூலிக்கிறது. (பிஎஸ்என்எல்லில் மட்டுமே இந்த வசதி. மற்ற நிறுவனங்கள் 2 எம்பிபிஎஸ் வரை அன்லிமிடட் என்று கூறிவிட்டு, குறிப்பிட்ட அளவு டவுன்லோட் முடிந்ததும், 256 KBPS ஆக சுருக்கி விடுகின்றன. இது வாடிக்கையாளருக்குத் தெரிவதில்லை!). இனி இந்த கட்டணமும் மாறும். 4 எம்பிபிஎஸ் வரையிலான அன்லிமிடட் பிராட் பேண்ட் இணைப்பு ரூ 800-க்கே கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. இதன்மூலம் விரைவான டவுன்லோட் மற்றும் தொலைக்காட்சி இணைப்பைப் பெற முடியும்.

நன்றி: தினமலர் வர்த்தக மலர், 15-06-2010

8
May

இன்ஷா அல்லாஹ், எதிர் வரும் ஜூலை 19-ந்தேதி  நீடூரில் தீன் கலைக்கல்லூரி துவங்க விருக்கிறது…! B.A., B.B.A., B.sc., B.com., & B.C.A பயில விரும்பும் மாணவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன என தீன் கல்வி அறக்கட்டளையின் தலைவர் முனைவர் ரபீயுத்தீன் தனது மின்னஞ்சல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

25
Apr

மேலும் விவரங்களுக்கு… http://southernrailway.gov.in/sr/inet_trn_num.jsp

23
Apr

க்ளிக் செய்யுங்கள்

23
Apr

19
Mar

விழுப்புரம் – மயிலாடுதுறை அகல ரயில் பாதையில் தலைமை பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு முடிந்துவிட்ட நிலையில், நேற்று முதல் முறையாக 118 கி. மீ., வேகத்தில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.  பத்து பெட்டிகள் இணைக்கப்பட்ட அதிவேக சோதனை ரயில் மயிலாடுதுறையில் நேற்று மாலை 3.08 மணிக்கு புறப்பட்டு, 118 கி.மீ., வேகத்தில் விழுப்புரம் வரை சென்றது. இந்த அதிவேக சோதனை ரயில் மயிலாடுதுறையில் இருந்து 37 கி.மீ., தூரமான சிதம்பரத்தை 3.32க்கும், கடலூரை 4.05 மணிக்கும், பண்ருட்டியை 4.23க்கும் கடந்தது. அசுர வேகத்தில் சென்ற ரயில், மாலை 4.35 மணிக்கு விழுப்புரம் ஜங்ஷனை சென்றடைந்தது.  (Read More…)

7
Nov

YousufDXBநீடூர்-நெய்வாசல் பாவா நகர் நிஸ்வான் மத்ரஸா கட்டிடப்பணிக்காக தாயகத்திலிருந்து துபை வருகை தந்திருக்கும் பாவா நகர் முத்தவல்லி முஹம்மது யூசுப் அவர்களுக்கு துபை நீடூர்-நெய்வாசல் அசோஸியேஷனின் சார்பில் நேற்று(06-11-2009) மாலை தேரா தமிழ்நாடு உணவகத்தில் வரவேற்புக் கூட்டம் நடைபெற்றது. நீடூர், நீடூர்-நெய்வாசல் மற்றும் பாவா நகர் ஜமாஅத்தார்கள் திரளாகப் பங்கேற்றார்கள்.

தகவல்: பைஜூர்ஹாதி

26
Sep

 IMHalal

www.imhalal.com -M.ரபி அஹ்மது, சிங்கப்பூர்

இண்டெர்நெட் எல்லோருக்குமானதுதான்.ஆனால் திறந்தமனம் கொண்டவர்களுக்கு மிகவுமேற்றது.மற்றபடி குறிப்பிட்ட நெறியின்படிதான் வாழ வேண்டும் என நினப்பவர்களுக்கு இண்டெர்நெட் சில நேரங்களில் சங்கடத்தை தரக்கூடும். (Read More…)

26
Jul
—– Forwarded Message —-
From: “csd@iobnet.co.in” <csd@iobnet.co.in>
To: muinuddeen@yahoo.com
Cc: nidurbr@nagasco.iobnet.co.in; regmgr@nagasco.iobnet.co.in; adv@nagasco.iobnet.co.in; pad@nagasco.iobnet.co.in
Sent: Wednesday, July 22, 2009 8:28:46 AM
Subject: Re: Complaint from a customer

 
Dear Sir,
 
Our Regional Office and Branch are sorting out the issues to the satisfaction of customers and appropriate actions are being taken by RO against the persons involved.
We assure our best attention at all times.
 
Cheif Manager
Customer Service Department (Read More…)
20
May

jmorafi

நீடூரில் தீன் கல்லூரி பணிகள் முழுவீச்சில் துவக்கியுள்ளன. இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் கல்வியாண்டில் கல்லூரி துவங்கும் என்று தீன் கல்லூரி ரபீயுத்தீன் கல்வி அறக்கட்டளையின் தலைவர் முனைவர் ரபீயுத்தீன் நமது இணையதளத்திற்கு அனுப்பிய மின்னஞ்சல் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

8
Mar

உங்கள் ரேஷன் கார்டு கேன்சல் ஆகிவிட்டதா(ம்)? பொதுமக்களின் கவனத்திற்கு!

அரசு விலையில் அங்காடிப் பொருள்களை வாங்குவதற்கு மட்டுமின்றி நாம் இந்தியக் குடிமகன் என்பதை நிரூபிப்பதற்காகவும் “ரேஷன் கார்டு” பெரிதும் பயன்படுகின்றது. அத்தகைய ரேஷன் கார்டுகளை பல்வேறு காரணங்களை சொல்லி காலாதிவிதியாக்குக்கின்ற வேலையை அரசு சார்ந்த அமைப்புகள் செய்து வருகின்றன.

ரேஷன் கார்டுகளை போலியாக வைத்திருப்போரை மெய்யாகவே இனங்கண்டு தக்க நடவடிக்கை எடுப்பதில் எவ்விதத் தவறும் இல்லை. மாறாக நேர்மையான முறையில் ரேஷன் கார்டு வைத்திருப்போரின் கார்டுகளை எவ்வித தகுந்த காரணமும் இல்லாமல் காலாவிதியாக்குவது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.

பொதுமக்கள் விழிப்புணர்வுடன் சமுதாய அமைப்புகள் மூலம் அரசின் மேல்மட்ட நிர்வாகத்தை தொடர்புக் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்த வேண்டும்.

27
Feb

This is a petition request:  Wikipedia has placed a painting of the Prophet Muhammad (P.B.U.H) on http://en.wikipedia.org/wiki/Muhammad.  They need about 100,000 signatures to remove it.  So far a little over 3,200 have signed; if you agree that it is wrong to depict his picture, please sign the petition.
 

Here’s the link.
                          http://www.petitiononline.com/mjk123/petition.html

2
Feb

நீண்ட நாளைக்குப்பின் நீடூரில் ரயில்!

கடந்த 30-01-2009 வெள்ளியன்று மயிலாடுதுறை சீர்காழி அகல ரயில் பாதையில் சோதனை ஓட்டமாக 20 சரக்கில்லாப் பெட்டிகளைக் கொண்ட சரக்கு ரயில் ஓட்டப்பட்டது.

train              தகவல்: H.ராஷிக் அஹ்மத் B.E. துபை

 

10
Jan

 நர்கிஸ்-மல்லாரி பதிப்பகம்   இணைந்து நடத்திய
‘முகம்மது இஸ்மாயில்-இபுராஹிம் பீவி நினைவு’
நாவல் -கட்டுரைப் போட்டியின் இறுதிகட்டத்  தேர்வில்

இடம் பெற்றோர் பட்டியல்

பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு நமக்கு ஆதரவு நல்கியிருக்கிறார்கள். புதியவர்களுடன் மூத்த எழுத்தாளர்களும் கலந்து கொண்டு நம்மை கௌரவித்திருக்கிறார்கள்.
அந்தப் பெருமக்களுக்கு நம் முதல் நன்றி. (Read More…)