 Posted by: நிர்வாகி

Filled in: பொதுவானவை
மாஷா அல்லாஹ், பல ஆண்டுகளாக ஜாமிஆ மிஸ்பாஹில் ஹூதா மதரஸா பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள வாய்ப்பில்லாத என்னைப் போன்றவர்களை, நேரலை ஒளிபரப்பின் மூலம் எங்களையும் விழாவில் சங்கமிக்கச் செய்தமைக்கு நீடூர்ஆன்லைன் நிர்வாகிகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும். எவ்வித தடங்களும் இல்லாமல், தரமான ஒளி அமைப்பையும், துல்லியமான ஒலி அமைப்பையும் அளித்து, முதல் நேரலை நிகழ்ச்சியிலேயே தமது தனித்துவத்தை நீடூர்ஆன்லைன் மீண்டும் நிரூபித்திருக்கிறது. உங்களின் சேவை மென்மேலும் சிறப்புடன் வளர எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்.
-Mohamed Rafick, Malaysia.
 Posted by: நிர்வாகி

Filled in: பொதுவானவை
நீடூர்-நெய்வாசல் கீழத்தெரு மர்ஹூம் பஹுருத்தீன் அவர்களின் துணைவியார் ஹாஜிரா அம்மாள் இன்று(24-07-2010) மாலை காலமானார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
தகவல்:M.S.ஜெஹபர் அலி, நீடூர்-நெய்வாசல்
 Posted by: நிர்வாகி

Filled in: பொதுவானவை
கோடைக்கால சிறப்பு நிகழ்ச்சியில் அண்ணன் மன்சூர் அவர்களின் கருத்துகள் நமது மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் மிகவும் பயனுல்லதாக இருக்கும், அண்ணன் மன்சூர் அவர்கள் இன்னும் பல பயனுள்ள கருத்துகளை முன் வந்து நமது ஊர் மக்களுக்கு சொல்லவேண்டும், அல்லாஹ் அவர்களுக்கு பரக்கத்தையும், ரஹ்மத்தையும் கொடுப்பானாக!
இந்த கோடை சிறப்பு நிகழ்ச்சியை பார்க்கும்போது 1990-ல் அண்ணன் எடுத்த “பாலசாரணி” வகுப்புகள் என் நினைவுக்குள் வருகிறது,அல்ஹம்துலில்லாஹ.
இந்த அருமையான, பயனுள்ள நிகழ்வை தேவையான நேரத்தில் வழங்கி கொண்டிருக்கும் நீடூர் ஆன்லைன் . காம் -ற்கு என் குடும்பத்தின் சார்பாகவும், எங்கள் ஊர் சார்பாகவும் கோடான கோடி நன்றி சொல்ல முயல்கிறேன். வாழ்த்துக்கள்.keep it up!!!!
அன்புடன்,
ஷா. ஷகதூர் (எஸ்கொயர் )
ஆஸ்திரேலியா.
 Posted by: நிர்வாகி

Filled in: பொதுவானவை
உலகெங்கும் வாழும் ஊர் சொந்தங்கள் தங்களின் மின்னஞ்சல், தொலைபேசி, புகைப்படம் & வசிப்பிடம்(நாடு) விவரங்களை அனுப்பி வைக்க வேண்டுகிறோம். ஊர் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க நமது இணையதளத்தில் வெளியிடுவோம். இதன் மூலம் பல்லாண்டுகளாக வெளிநாட்டில் வசிப்பதால் தொடர்பில் இல்லாத நண்பர்களையும், உறவினர்களையும் தொடர்பு கொண்டு மகிழ பாலம் அமைப்போம்.
 Posted by: நிர்வாகி

Filled in: பொதுவானவை
சகோதரர் A.M.ஷாஹூல் ஹமீது அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்,
பல வருடங்களுக்கு முன்பு, வரதட்சணை வாங்கக் கூடாதென்று ஊர் நிர்வாகிகளால் இயற்றப்பட்ட (எழுத்துக்களால் எழுதப்படாத-மீறினாலும் தண்டனை எதுவும் அளிக்கப்படாத) ஒரு சட்டத்தை ஏற்று, அனைவரும் ஒன்றுபட்டு வரதட்சணை என்ற வார்த்தையையே வழக்கொழியச்செய்து, அரசாங்கத்திற்கே முன்மாதிரியாக விளங்கிய நமது சமுதாயம், இன்று தராவீஹ் தொழுகை எத்தனை ரகாஅத் என்பதில் ஆரம்பித்து, ஹனஃபி இமாமைப் பின்பற்றி ஷாஃபி முறையில் தொழுதுகொள்வதுவரை கொள்கை முரண்பாடுகளால் பிளவுப்பட்டுள்ளதே? ஏன்? (Read More…)
 Posted by: நிர்வாகி

Filled in: பொதுவானவை
முகம்மது அன்சாரி, தஞ்சை.
நான் ஒரு இஸ்லாமியன். எந்தத் தீவிரவாத இயக்கங்களுடனோ அல்லது அத்தகைய கொள்கைகளிலோ சிறிதளவும் பற்றில்லாதவன். இந்திய இறையாண்மையிலும், அதன் மதச்சார்பற்ற கொள்கைகளிலும் பெருமதிப்பு வைத்திருப்பவன். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு என்னை ஒரு தோழனாகவும், சக மனிதனாகவும் பார்த்த பலரிடம் இன்று ஏதோ ஒரு சொல்ல முடியாத தயக்கமும், எதிர்ப்புணர்ச்சியும் இருப்பதை என்னால் உணர முடிகிறது. இது எனக்குப் பெரும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. சொந்த சகோதரர்களிடமிருந்தே விலகி நிற்கும் வலி ஏற்படுகிறது?
இது உங்களுக்கு மட்டுமல்ல. அமெரிக்க ஜனாதிபதியாக எதிர்காலத்தில் வரப் போவதற்கான பிரகாசமான வாய்ப்புள்ள ஒபாமாவுக்கே ஏற்படும் உணர்வுதான். அவர் பெயரின் நடுவில் உள்ள சொல் “ஹூசேன்”. அதனால் அவரைப் பற்றிய மதரீதியான பிரச்சாரங்கள் அங்கே வெறுப்புடன் நடத்தப்படுகின்றன. அவரை எதிர்த்துப் போட்டியிடும் மெக்கேய்னிடம் ஒரு பெண்மணி இப்படி கேட்டிருக்கிறார். “ஒபாமா ஒரு அரேபியர் என்று கேள்விப்பட்டேனே?” அதற்கு மெக்கேய்ன் சொன்ன பதில் “இல்லை மேடம். அவர் ஒரு நாகரிகமான குடும்பத் தலைவர்”. இதற்கு என்ன அர்த்தம்? ஒரு அரேபியரால் நாகரிகமான குடும்பத்தலைவராக இருக்க முடியாது என்பதுதானே? இஸ்லாமியர்கள் எல்லோரையும் தீவிரவாதிகளாகச் சித்திரிப்பதில் மீடியாவுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பெரிய பங்கு இருக்கிறது. அதனுடைய விளைவுதான் உங்களின் வலி. கவலைப்படாதீர்கள். உண்மைதான் கடைசியில் வெல்லும்.
 Posted by: நிர்வாகி

Filled in: பொதுவானவை
Assalamu Alaikkum,
This is Noorullah from Abu Dhabi. I am basically from Arangakudi with my origin from Nidur , as my grand-parents (both Father & Mother way) were linked to Nidur. I am the grandson of Nidur “Modern Store” Marhoom Janab. Hidhayathullah. I must, surely have to, appreciate the efforts exerted towards making a full-fledged and dedicated website for Nidur with quality design and all. Hats off for that..! This facilitate all Nidurites to be in touch with, and to share local happenings with a mouse click, irrespective wherever they are located around the globe..! Really a remarkable and admirable work done. I wish this site be of great use to all of us not only in terms of knowing and getting updated with day-to-day happenings, but with reading / listening to the Islamic content as well, that are posted in the site.
Best regards,
Noorullah, Abu Dhabi
 Posted by: நிர்வாகி

Filled in: பொதுவானவை
This is Arivazhagn s/o.Subbaiyan from nidur periyamathagu.first i want to say thanks to the founder of niduronline.com.i am really proud that my village is having such a wonderful site.it’s giving a lot of information day to day.nidur is such a well known place and having good peaceful relationship between muslim,hindu and christians.
 Posted by: நிர்வாகி

Filled in: பொதுவானவை
நான் நமது நீடூர்ஆன்லைன்.காம்-ஐ கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்த்தேன். நமதூர் பாரம்பரியங்களை பரைசாற்றும் விதமாக உலகமே நமதூரை உற்று பார்க்கும் வகையில் வெற்றிகரமாக சேவையாற்றும் இணையதளக்குழுவினரின் பணி சிறக்க துஆ செய்கிறேன்.நமதூர் நிகழ்வுகளை நேரில் பார்த்த உணர்வை அடைந்தேன்.
S.MOHAMED NABEES(Kuwait),NEW TANK STREET, NIDUR- NEIVASAL
 Posted by: நிர்வாகி

Filled in: பொதுவானவை, வீடியோ

 Posted by: நிர்வாகி

Filled in: பொதுவானவை
நாம் வாழும் இப்புவி நாளுக்கு நாள் வெப்பமடைவதால் ஏற்படும் தொடர் பாதிப்பு உலக அளவில் உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது.
இப்புவியின் வட தென் துருவப் பகுதிகளிலும், இமாலயம் போன்ற நெடுதுயர்ந்த மலைகளின் சிகரங்களையும் வெள்ளாடை போர்த்தி அழகூட்டி அலங்கரித்துக் கொண்டிருக்கும் பனிப்பாறைகள் மெதுவாக உருகி, சொட்டுச் சொட்டாக விழுந்து, சிறு சிறு நீரோடைகளாகி, அவைகள் ஒன்றாகி ஆறாகப் பெருக்கெடுத்து பெரும் நதிகளாகி, நம் உயிர் வாழ்க்கைக்கு ஆதாரமான விவசாயத்தையும், எண்ணற்ற இயற்கை வளங்களையும் வாரி வழங்கி வருகின்றன.
(Read More…)
 Posted by: நிர்வாகி

Filled in: பொதுவானவை
இன்று (27.05.2008)ஈரோட்டில் நடைபெற்ற தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் மாநில நிர்வாகிகள் தேர்வில் தலைவராக லால்பேட்டை J .M.A. பேராசிரியர் A.E.M.அப்துல் ரஹ்மான் ஹளரத், செயலாளராக M.O.அப்துல் காதிர் ஹளரத், பொருளாளராக முஹம்மது தாஹா ஹளரத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளர்கள்.
 Posted by: நிர்வாகி

Filled in: பொதுவானவை
நர்கிஸ்-மல்லாரிப் பதிப்பகம் இணைந்து நடத்தும்
“முகம்மது இஸ்மாயில்-இபுறாஹீம் பீவி நினைவு”
நாவல்-கட்டுரைப் போட்டிகள்
(Read More…)
 Posted by: நிர்வாகி

Filled in: செய்திகள், பொதுவானவை
துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாத் பேச்சுப் போட்டிகள்
அமீரகத்தின் வணிகத் தலைநகராக விளங்கும் துபாயில் கால் நூற்றாண்டுக்கும் அதிகமாக கல்வி மற்றும் சமூக மேம்பாட்டுப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் (ஈமான்) வருடந்தோறும் மீலாத் பெருவிழாவை முன்னிட்டு பேச்சுப் போட்டிகளை நடத்தி வருகிறது. இதுகுறித்து ஈமான் பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ.லியாக்கத் அலி செய்தியாளர்களிடம் தெரிவித்த போட்டிகள் குறித்த விபரமாவது:
(Read More…)
 Posted by: ஊர்க்குருவி

Filled in: பொதுவானவை

நாம் யார்?
அசுத்தத்திலிருந்து பிறந்தவர்கள். ஆனால் அசுத்தமான செயல்களை அடியோடு வெறுப்பவர்கள். பிறப்பால்,மொழியால், இனத்தால், நிறத்தால் ஏற்றத்தாழ்வு இல்லை என்பதை அடிப்படையாய் ஏற்றுக் கொண்டவர்கள். ஆனால் சில வேளைகளில் நம்மை நாமே உயர்வாக எண்ணிக் கொள்கிறோம். நம்மை நாமே உயர்வாக எண்ணவில்லையென்றால் தாழ்வு மனப்பான்மையல்லவா வந்துவிடும் என்கிறீர்களா? நமது திறமையை வளர்ப்பதற்கு, சாதனைப் படைப்பதற்கு உயர்வாக நினைப்பது தவறில்லை. ஆனால் அந்த நினைப்பு நம்மை கர்வம் கெண்டவர்களாக ஆக்கிவிடக் கூடாது. அவ்வாறு கர்வ நிலை ஏற்படுமேயானால் அதன் விளைவு விபரீதத்தில் போய் முடியும். நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு வகையில் பலருக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். (Read More…)
 Posted by: நிர்வாகி

Filled in: செய்திகள், பொதுவானவை
நீடூர்-நெய்வாசலில் கியாமுல் லைல் நடுநிசி சிறப்புத் தொழுகை மிஸ்பாஹுல்ஹுதா பள்ளிவாசலில் தொடர்ந்து 4-வது வருடமாக நடைபெற்று வருகிறது. ஜமாஅத்தார்கள் தவறாமல் கலந்து கொண்டு இறை நெருக்கத்தையும், உளத்தூய்மையையும், மக்பிரத்தையும் பெற வேண்டுகிறோம்.
 Posted by: நிர்வாகி

Filled in: பொதுவானவை
தமிழக முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகிதம் இடஒதுக்கீடு ரமளான் மாதத்தில் கிடைத்திருக்கிறது.
அல்ஹம்துலில்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்!
தமிழக முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகிதம் இடஒதுக்கீடு மிக மிக குறைவுதான் இருந்தாலும் இந்த முதல் நடவடிக்கையை தமிழக முஸ்லிம்கள் குறை சொல்லாது பாராட்ட வேண்டும். (Read More…)
 Posted by: நிர்வாகி

Filled in: பொதுவானவை

சமீப காலமாக நீடூரில் ப்ராட்பேண்ட் இணைப்பு பெறுவது மிகவும் இலகுவாக்கப் பட்டுள்ளது. விண்ணப்பித்த 2 – 3 நாட்களிலேயே இணைப்பு கொடுக்கப் பட்டு விடுகிறது. Dialup-ஐ விட ப்ராட்பேண்ட் இணைப்பு ஒப்பிட்டு நோக்கும்போது மிகவும் சிக்கனமானதுதான். மாதம் ரூபாய்.250.00 திட்டத்தில் (Read More…)
 Posted by: நிர்வாகி

Filled in: செய்திகள், பொதுவானவை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் சமுதாய விழிப்புணர்வு பெருவிழா 15-07-2007 ஞாயிறு காலை 10-மணிக்கு சிந்தனை சித்தர் அல்ஹாஜ் A.M.சயீது B.A.B.L., அவர்களின் தலைமையில் துவங்கியது. சகோதரர் ஷமீமுல் இஸ்லாம் அவர்கள் கிராஅத்துடன் துவங்கி அல்ஹாஜ் S.அக்பர் அலி வரவேற்புரை நிகழ்த்த சகோதரர் J.P.ஜவ்ஹர் அலி அவர்களின் நீடூர்ஆன்லைன் அறிமுக உரையுடன் சிறப்பு சொற்பொழிவாளர்களின் விழிப்புணர்வு உரைகளுடன் இரவு 10-15 மணி வரை சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சி நமது சமுதாய மக்களை விழிப்புணர்வோடு சிந்திக்கத் தூண்டியுள்ளதை பரவலாகக் காணப் படுகிறது. இந்நிகழ்ச்சியின் முழு விவரத்தையும், வீடியோக்களையும் விரைவில் காணலாம்.
 Posted by: நேசன்

Filled in: பொதுவானவை
பொதுநல சிந்தனை, தொலைநோக்குப் பார்வை நம் அனைவர்க்கும் உடனடித் தேவை. சமூக மக்களிடம் கருத்து வேற்றுமைகள் ஏற்படுவது இயற்கை. அந்த கருத்து வேற்றுமைகள் ஆரோக்கியமான முறையில் இருக்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் நமக்குள் வன்மத்தை வளர்த்து விடக் கூடாது. (Read More…)
|
|
|
|