24
Apr

A floating desalination plant is en route to Jeddah to boost water and power supplies.தற்போது ஜித்தாவில் நிலவுகின்ற தண்ணீர் தட்டுப்பாட்டை நீக்குவதற்காக, மிதவை கடல்நீர் சுத்திகரிப்புக்கூடம் ஏப்ரல் இறுதியில் கரையை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உற்பத்திக் கூடம் ஏற்கனவே செங்கடலை அடைந்திருந்தாலும், ஜித்தாவை நோக்கிய தன் பயணத்தில் தற்போது இருக்கிறது. இதுபோன்ற மற்றொரு உற்பத்திக்கூடமும் மே மாத இறுதியில் ஜித்தாவின் கடற்கரையை வந்தடையும். இதனால் ஜித்தாவின் தண்ணீர் தட்டுப்பாடு வெகுவாக நீங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (Read More…)

6
Apr

ultra2.jpgஇனிவரும் தலைமுறைகள் அம்மி, அடிப்பம்பு, உலக்கை, குடக்கல் போன்றவற்றை மியூசியத்தில் மட்டும்தான் பார்க்க முடியும் என்பதை உண்மைபடுத்தும் விதமாக, வாழ்வின் அன்றாட தேவைகளுக்கு எலக்ட்ரிகல் சாதனங்களையே நம்பி வாழ்கிறோம். இச்சாதனங்கள், நம்மை அறியாமலேயே உடல் உறுப்புகளுக்கு இலவசமாக கிடைத்துக்கொண்டிருந்த பயிற்சிகளை தடுத்து, பலவித நோய்களில் அல்லல் பட காரணமாக அமைந்துவிட்டன. இன்றைய சூழ்நிலையில் உலகின் மிகப்பெரிய நோய்களில் நீரிழிவு நோயும் ஒன்றாகும்.

(Read More…)

1
Apr

Jaguarவளர்ந்து வரும் நாடுகளுக்கு மத்தியில் இந்தியாவும் சீனாவும் உலகளவில் பேசப்பட்டுக்கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. இதற்கு சற்று மேலான செய்தி ஒன்று கடந்த மார்ச் 26-ல் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. அதாவது பணக்காரர்களின் (ஐரோப்பிய) ஆடம்பர “கார்”களாக (European luxury brands) கருதப்படும் ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் கார் கம்பெனிகளை ஃபோர்ட் நிறுவனத்திடமிருந்து, இந்தியாவின் டாடா குழுமம் 2.3 பில்லியன் டாலருக்கு வாங்குகிறது (Read More…)

2
Mar

makkah-madinah-railமக்கா-மதினா அதிவேக இரயில் போக்குவரத்து திட்டத்திற்கு சவுதி அரேபியாவின் மன்னர் அப்துல்லாஹ் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஹஜ் மற்றும் உம்ரா புனிதப் பயணங்களில் புதிய வசதியை ஏற்படுத்தி தரும் இத்திட்டத்தின் மதிப்பு சுமார் 20 பில்லியன் சவுதி ரியால் (சுமார் 5.33 பில்லியன் அமெரிக்க டாலர்) ஆகும்.

இப்புதிய திட்டம் தரும் வசதியின்படி,  மணிக்கு 300 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய அதி நவீன இரயிலில்,  30 நிமிடத்தில் மக்காவிலிருந்து ஜித்தாவிற்கும், 2 மணிநேரத்தில் மதினாவிற்கும் செல்ல முடியும் என்று சவுதி போக்குவரத்துத் துறை அமைச்சர் டாக்டர் ஜபாரா அல் ஸராய்ஸ்ரி தெரிவித்துள்ளார். 

இத்திட்டத்தின் கீழ் சுமார் 500 கி.மீ புதிய அதிநவீன மின்சார இரயில் பாதை மக்கா-ஜித்தா-மதினாவிற்கு இடையே போடப்படும்.  இப்புதிய இரயில்பாதை அதிநவீன தொழில்நுட்பத்துடன் சிறந்த தகவல் தொடர்பையும் உள்ளடக்கியதாக இருக்கும். சவுதி அரேபியாவின் நவீன தொழில்நுட்ப போக்குவரத்தை இத்திட்டம் மேலும் அதிகப்படுத்தும் என்பதாகத் தெரிகிறது. (Read More…)