2
Apr

summer2

நீங்கள் எதிர் வருகின்ற கோடை விடுமுறையை எப்படிக் கழிக்கலாம் என வெகு ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருப்பது தெரிகிறது. கடின உழைப்புக்குப் பின்பு கட்டாயம் ஓய்வு தேவை. ஆனால் அதே நேரத்தில், ஒரு பொன்னான வாய்ப்பாக வருகின்ற ஒரு விடுமுறைக் கால அவகாசத்தை பெரும்பாலான மாணவர்கள் வீணடித்து விடுகின்ற நிலையையும் நாம் கண்டு வருகிறோம்.

எனவே உங்களுக்கென்று சில ஆலோசனைகள்: (Read More…)

1
Apr

summer1


கோடை நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது. படு சீரியஸாக தேர்வுகளை எழுதி முடித்து விட்டு மாணவர்களும் மாணவிகளும் – எதிர் வரும் கோடை விடுமுறையை “ஜாலியாக” எப்படிக் கழிக்கலாம் என வெகு ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள் அவர்கள்.

பெற்றோர்களைப் பொறுத்தவரை இது ஒரு பெரிய சவால்.சில பெற்றோர் – “ஏன் தான் இந்தக் கோடை வருகிற்தோ” என்று அலுத்துக் கொள்ளும் அளவுக்கு அங்கலாய்த்துக் கொள்கிறார்கள்.

எனவே பெற்றோர்களாகிய உங்களுக்கு சில ஆலோசனைகள்:

அவர்களுடன் கொஞ்ச நேரம் (Read More…)

17
Mar

gc

இன்று ஒட்டு மொத்த உலகமுமே பொருளாதாரப் பின்னடைவால் சிக்கித் தவிக்கின்றது. உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள பல்வேறு நிறுவனங்களில் ஆட்குறைப்பு , சம்பளக் குறைப்பு என்று தடாலடியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன.

இதனால் – வேலையை இழந்தவர்களும், சம்பளம் குறைக்கப் பட்டவர்களும் பல்வேறு பொருளாதாரப் பிரச்னைகளுக்கும், மன நலப்பிரச்னைகளுக்கும் ஆளாகிறார்கள். (Read More…)

10
Mar

ttalaq

இஸ்லாமிய மாத இதழ்களில் இப்படி சில கேள்விகள் கேட்கப் படுகின்றன:

“எஸ்.எம்.எஸ் வழியே அல்லது தொலைபேசி வழியே தலாக் சொன்னால் தலாக் நிகழ்ந்து விடுமா?” ஆம்! நிகழ்ந்து விடும் என்று ஒரே வரியில் பதில் அளிக்கப் படுகிறது.

ஆனால் பின்னணி என்ன என்பது புரிந்து கொள்ளப் படாமலே பதில்கள் அளிக்கப் படுவதால், பலரது வாழ்க்கை பாதிக்கப் படுகிறது என்பதை ஏனோ புரிந்து கொள்ளத் தவறி விடுகிறோம். சாதாரணமாக மருத்துவம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் மருத்துவர்கள் கூட, தங்கள் ஆலோசனைகளை எழுதி விட்டு, இறுதியில் அருகில் உள்ள மருத்துவரை அணுகவும் என்று முடிக்கிறார்கள். ஏன் அப்படிப் பட்ட ஒரு அணுகுமுறையை நாம் மேற்கொள்ளக் கூடாது? தலாக் சம்பந்தப் பட்ட கேள்விகளுக்கு அளிக்கின்ற பதில்களோடு சேர்த்து, அருகிலுள்ள இமாமையோ, அரபுக் கல்லூரியையோ அணுகவும் என்று எழுதலாம் தானே? விஷயத்துக்கு வருவோம். (Read More…)

15
Oct

குழந்தைகளை அடிக்காதீர்கள்.   

“அப்பா, அண்ணன் என்னை அடிக்கிறான், பாருங்களேன்.” – என்று ஓடி வருகிறான் தம்பி.
“அவன் தான்ப்பா முதலில் என்னை அடித்தான்.” – இது அண்ணன்.
“டேய்! யாரடா முதலில் அடித்தது? – இது தந்தை.
தம்பி தயங்கியபடியே – அவன் ஏன்ப்பா என்னைத் திட்டினான். அதனால் தான் அவனை அடித்தேன்!”

(Read More…)

4
May

sam040507.gif

1
May

கட்டுரைப் பகுதியில் இடம்பெற்ற ஆக்கம்(இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு தொடர்-8)

எந்த ஒரு தாயாவது தான் பெற்றெடுத்த குழந்தையை “சனியனே!” என்று அழைப்பாளா? ஆனால் அழைக்கிறார்களே! இதை எங்கே போய் சொல்வது? “சனியனே! இங்கே வந்து தொலையேன், உன்னை எத்தனை தடவைக் கூப்பிடறது!” என்று திட்டுகின்ற தாய்மார்களை நாம் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம். (Read More…)

1
May

கட்டுரைப் பகுதியில் இடம்பெற்ற ஆக்கம்(இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு தொடர்-7) 

ஒரு வயது கூட நிரம்பியிருக்காது அக்குழந்தைக்கு. அதன் தாய் அந்தக் குழந்தை விளையாடுவதற்காக சில ப்ளாஸ்டிக் டப்பாக்களை எடுத்து வருகிறார். குழந்தைக்கு முன்னே அமர்ந்து கொண்டு அவைகளை எப்படி அடுக்கிட வேண்டும் என்று செய்து காட்டுகிறார். குழந்தை அந்த டப்பாக்களை எடுத்து வைத்துக் கொண்டு அடுக்கத் தொடங்குகிறது. (Read More…)

1
May

கட்டுரைப் பகுதியில் இடம்பெற்ற ஆக்கம்(இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு தொடர்-6) 

பிறந்து சில மாதங்களே ஆன குழந்தை ஒன்று. இரவில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை திடீரென்று விழித்துக் கொள்கிறது. அழத்தொடங்குகிறது. நீங்கள் ஒரு தாய். என்ன செய்வீர்கள்?

இங்கே ஒரு தாய். அவர் பாசத்துடன் தனது குழந்தையை வாரி அணைத்துத் தூக்கிக் கொள்கிறார். (Read More…)

1
May

கட்டுரைப் பகுதியில் இடம்பெற்ற ஆக்கம்(இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு தொடர்-5)

ஒப்பு நோக்குங்கால் தந்தையை விட தாய்க்கே குழந்தை வளர்ப்பில் பொறுப்பு அதிகம் என்பது உண்மைதான். ஆனால் தந்தையின் பொறுப்பு என்பது தன் குழந்தைகளுக்கு செலவு செய்வது மட்டும் தான் என்று பல தந்தைமார்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது அப்படியல்ல. (Read More…)

1
May

கட்டுரைப் பகுதியில் இடம்பெற்ற ஆக்கம்(இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு தொடர்-4)

• குழந்தைகள் நம் இல்லங்களை அலங்கரிக்க வருகின்ற அலங்காரப் பொக்கிஷங்கள் (குர்ஆன் 18: 46).

• குழந்தைகள் நம் கண்களுக்கு குளிர்ச்சி தருகின்ற பெட்டகங்கள்(குர்ஆன் 25: 74).

• குழந்தைகள் இறைவன் புறத்திலிருந்து நமக்கு வழங்கப் பட்டிருக்கின்ற அருட்கொடைகள். ஆம் அது ஒரு நிஃமத். (Read More…)

1
May

கட்டுரைப் பகுதியில் இடம்பெற்ற ஆக்கம்(இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு தொடர்-3)

சொற்பொழிவு ஒன்றில் கேட்ட நினைவு.

அவர் ஒரு சிறந்த மார்க்க அறிஞர். ஒரு நாள் அவரிடம் ஆலோசனை கேட்க ஒருவர் வந்திருந்தாராம்.

‘குழந்தை வளர்ப்பது எப்படி என்பது குறித்து தங்களிடம் ஆலோசனை பெற வந்துள்ளேன்’.

அறிஞர் கேட்டார்: ‘உங்கள் குழந்தையின் வயது என்ன? ‘ (Read More…)

29
Apr

கட்டுரைப் பகுதியில் இடம்பெற்ற ஆக்கம்(இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு தொடர்-2) 

அன்று ஒரு நாள் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு இஸ்லாம் பற்றி பாடம் நடத்திக் கொண்டிருந்தேன். பாடத்தைத் துவங்கிடும் முன்பு கேள்வி ஒன்றைக் கேட்டேன்:
‘”முஸ்லிம் என்றால் யார்?”
ஆளுக்கொரு பதிலைச் சொன்னார்கள். (Read More…)

28
Apr

கட்டுரைப் பகுதியில் இடம்பெற்ற ஆக்கம்(இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு தொடர்-1) 

நல்ல துணி வகைகளை எடுத்து நன்றாக தைக்கத் தெரியாத டெய்லர் ஒருவரிடம் கொடுத்தால் நமது உடைகளின் நிலை என்னவாகும்?

தேவையான அனைத்து சமையல் பொருட்களையும் தேர்வு செய்து சமைக்கத் தெரியாத சமையல்காரரிடம் கொடுத்தால் அந்த உணவின் சுவை எப்படி இருக்கும்? (Read More…)

1
Feb

கட்டுரைப் பகுதியில் இடம்பெற்ற ஆக்கம் ஆண்டுத் தேர்வுகளும், பொதுத் தேர்வுகளும் நெருங்கிக் கொண்டிருக்கின்றன. மாணவர்களும், மாணவிகளும் தேர்வுக்கு தங்களை தயார் படுத்திக் கொண்டிருக்கும் நேரம் இது. இத்தருணத்தில் அவர்களுக்கு சில அறிவுரைகள்: (Read More…)