18
Dec

oorkuruvi.jpg

நாம் யார்?

அசுத்தத்திலிருந்து பிறந்தவர்கள். ஆனால் அசுத்தமான செயல்களை அடியோடு வெறுப்பவர்கள். பிறப்பால்,மொழியால், இனத்தால், நிறத்தால் ஏற்றத்தாழ்வு இல்லை என்பதை அடிப்படையாய் ஏற்றுக் கொண்டவர்கள். ஆனால் சில வேளைகளில் நம்மை நாமே உயர்வாக எண்ணிக் கொள்கிறோம். நம்மை நாமே உயர்வாக எண்ணவில்லையென்றால் தாழ்வு மனப்பான்மையல்லவா வந்துவிடும் என்கிறீர்களா? நமது திறமையை வளர்ப்பதற்கு, சாதனைப் படைப்பதற்கு உயர்வாக நினைப்பது தவறில்லை. ஆனால் அந்த நினைப்பு நம்மை கர்வம் கெண்டவர்களாக ஆக்கிவிடக் கூடாது. அவ்வாறு கர்வ நிலை ஏற்படுமேயானால் அதன் விளைவு விபரீதத்தில் போய் முடியும். நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு வகையில் பலருக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். (Read More…)